| இனியசொற் கூறல் |
| கடுஞ்சொற் கூறுவோர் கயவரே யாவர் |
351 | வன்மொழி யுரைக்கினெதிர் வன்மொழி கிடைக்கும் இன்மொழி யுரைக்கின்வரு மின்மொழி யெமக்கும் நன்மொழிக ளேபல விருக்கநவி லாமற் புன்மொழி யுரைப்பவர்கள் பூரியர்க ளன்றோ. |
|
| நாம் யாருடனும் வன்மொழி பேசினால் நமக்கும் வன்மொழியே கிடைக்கும். இன்சொல் சொன்னால் இன்சொல்லே கிடைக்கும். நல்ல சொற்கள் பல இருக்க அவற்றைக் கூறாது இழிவான கடுஞ்சொற் கூறுவோர் தாழ்வானவர்கள் ஆவர். |
| பூரியர்-தாழ்வானவர். |
| 5 |
| வேறு | அறிவிற் பெரியோர் அனைவரையும் பணிவர் |
|
352 | தேமலி சுவைக்கனி பலசெ றிந்துயர் காமரம் வளைதல்போல் கலையு ணர்ந்திடு தூமன மாட்சியோர் தொழுவர் யாரையும் பாமர ரெவரையும் பணிந்தி டார்களே. |
|
| தேனும் சுவையும் மிகுந்த கனிகள் பல நிறைந்து உயர்ந்து வளரும் சோலைமரங்கள் வளைவது போன்று நிறைந்த கல்வியுணர்வுடையார்-தூய மனமாண்புள்ளார்-எல்லாரையும் தொழுவர். கல்வி அறிவு இல்லாத கீழோர் ஒருவரையும் தொழார். |
| தே-தேன்; இனிமை. கா-சோலை. பாமரர்-அறிவிலாக் கீழோர். பணிதல்-தொழுதல். |
| 6 |
| வேறு |
| இருக்கை இன்சொல் வரவேற்பால் எய்துவது அன்பு |
353 | எதிர்சென்று முகமன் கூறி யிருக்கையும் நல்கி யுண்டே அதிசய மெனவி னாவி அன்பொடு முகம லர்ந்து துதிபுரிந் துபச ரிக்கும் தொழிலினாற் செலவொன் றில்லை அதிர்கடல் உலகு ளோர்தம் அன்பெலாம் வரவா மாதோ. |
|
| ஒருவரைக் கண்டபொழுது எதிர்சென்று இனிய கூறி அழைத்து வந்து, நல்ல இருக்கையி லமர்வித்துச் சிறப்பு என்ன |