பக்கம் எண் :

167

  
 

அதி. 33-பிறர்க்குத் தீங்கு செய்யாமை

 

துன்புசெய்வானையே துன்பம் முதற்கொலும்

356
விடதரம் பற்றிவே றொருவன் மேலிடும்
அடலுளோன் தன்னைமுன் னதுக டித்தல்போல்
இடர்பிறர்க் கிழைத்திடு மியவன் றன்னைமுன்
மிடலொடு மவ்விடர் மேவிச் சாடுமே.
 

பாம்பைப்பிடித்து வேறொருவன்மேல் இடும் வலிமையுள்ளவனை அப்பாம்பு, முதன் முதலாகக் கடிப்பதுபோல, துன்பம் பிறருக்குச் செய்யும் கீழ்மகனை முதன்முதலாக அத் துன்பம், மிக்க வலிமையொடும் தெறும்.

 விடதரம்-பாம்பு. அடல்-வலிமை. மிடல்-வலிமை. இயவன்-கீழ்மகன். சாடும்-கொல்லும்; தெறும்.
 

1

 

நற்பண்பு உள்ளாரையே மக்களென நவில்வர்

357
படியின்மா னிடர்மிகு பண்பு ளோரலாற்
கொடியரை நரரெனக் கூறல் பாரெலாம்
இடியெனக் கொலைத்தொழி லியற்றுந் திவெடிற்
பொடியினை மருந்தெனப் புகல லொக்குமே.
 

உலகத்தில் மக்களுக்குரிய நல்ல பண்புள்ளவர்களையே மானிடர் என்று சொல்லுவது. கொடியவர்களை மக்கள் என்று சொல்லுவது, இடிபோன்று கொல்லும் தன்மை வாய்ந்த தீய வெடியுப்புப் பொடியினை உயிரை நிலைக்கச்செய்யும் மருந்து என்று சொல்லுவதனோடு ஒக்கும்.

 மானிடர்-மக்கள். நரர்-மக்கள். வெடில்-வெடியுப்பு.
 

2

 

இடர்செய்வான் துன்ப இடையினில் நைவன்

358
உரவுநீர்க் கருங்கட லுடுத்த பார்மிசைப்
பரர்வருந் திடவிடர் பண்ணு வோன்றனை
நரரெலாம் பகைசெய்வர் நண்ணு மாயிரம்
அரவுசூழ் கின்றவோர் தேரை யாவனே.
 மிக்க நீரையுடைய கடலால் சூழப்பட்ட உலகத்தில் பிறர் வருந்தும்படி துன்பம் செய்வோனை மக்கள் எல்லாரும் பகைப்பர்.