| நீதிநூல் |
| அவனும் ஆயிரம் பாம்பின் மத்தியில் அகப்பட்ட தேரைபோன்று வருந்துவன். |
| உரவுநீர்-கடல். |
| 3 |
| வேறு |
| கெடுவான் கேடு நினைப்பான் |
359 | கயலிற் பாய்சிரல் கால்சிக்கிக் கொண்டெழ வயமிலா துயிர்மாய் கின்ற தன்மைபோல் அயல வர்க்கழி வாகவோ ரந்தரஞ் செயநி னைத்தவர்க் கேவந்து சேருமே. |
|
| கெண்டைமீனைப் பிடிக்கப் பாய்ந்த சிச்சிலி சேற்றில் கால்சிக்கி எழ வலிமையற்று மாள்வதுபோன்று, பிறர் கெடும்படி ஒரு தீமை செய்ய நினைத்தவர்க்கே அத் தீமை வந்து சேர்ந்து அவர் கெடுவர். |
| கயல்-கெண்டைமீன். சிரல்-சிச்சிலி. வயம்-வலிமை. ரந்தரம்-தீமை. |
| 4 |
| வேறு |
| தீங்கு செய்வாரைக் காட்டிற்குச் செலுத்துதல் சிறப்பு |
|
360 | புயகமதைத் தேள்புலியைப் பொல்லாத விலங்கையெலாம் அயர்வாக வடித்தோட்டல் அவைகள்குணத் தாலன்றோ இயல்பின்றி யெந்நாளும் ஏதிலார்க் கிடரிழைக்குங் கயவனையே வைதடித்துக் கானோட்ட னன்றாமே. |
|
| பாம்பு தேள் புலி முதலிய கொடிய உயிர்களை மனக்கலக்கத்தோடும் அடித்து விரட்டுதல் அவைகளிடத்துள்ள கொடுந்தன்மையால் அல்லவா? முறையின்றி எந்த நாளும் பிறர்க்குத் துன்பஞ் செய்யும் கீழ்மகனைத் திட்டி அடித்துக் காட்டுக்கு ஓட்டுதல் நல்லதாகும். |
| புயகம்-பாம்பு. அயர்வு-மனக்கவற்சி. |
| 5 |
| ------ |