| நீதிநூல் |
| கதிரவன் கணக்கால் காலன் வருவான் |
363 | வானுலாம் அருண னென்னு மக்களா யுளின்க ணக்கன் தானெழு முன்னெ ழாரைச் சகத்திரக் கரத்தால் தட்டும் ஏனென வெழார்வாழ் நாளைஎண்குறைத் தெழுதிக்கொள்வான் ஆனது கண்டு கால னவரிடம் அணுகு வானே. |
|
| விண்ணிலே படர்ந்து செல்லும் ஞாயிறு என்னும் மக்கள் வாழ்நாளாகிய அகவையைக் கணக்கெடுப்போன், தான்தோன்றுவதன் முன்னம் மக்கள் எழுதல்வேண்டும். அப்படி எழாதவர்களை அவன் தன்னுடைய ஆயிரங் கதிர்க் கைகளால் தட்டி எழுப்புவன். உடன் ஏன் என்று எழாதவர்களின் அகவையைக் குறைத்து எழுதிக்கொள்வான். காலன் அக்கணக்கைப் பார்த்து மக்களுயிரைக் கொண்டுபோக நெருங்குவான். |
| அருணன்-ஞாயிறு. சகத்திரம்-ஆயிரம். கரம்-கை. வாழ்நாள்-அகவை. அணுகுவன்-நெருங்குவன். |
| 3 |
| வேறு | சிறு துயிலற்றுப் பெருந்துயில் ஏற்பதே சாவு |
|
364 | உறங்குவது போலுஞ்சாக் காடென்ன உரைத்தார் இறங்கலில்சீர் வள்ளுவனார் போலுமெனன் மிகையே நிறங்குலவு சிறுதுயிலற் றேல்நெடிய துயிலை மறங்குலவு மரணமே எனக்கூறல் வழக்கே. |
|
| பெருகுபுகழ் மிகுந்த திருவள்ளுவநாயனார் `உறங்குவது போலுஞ் சாக்காழு டென்று அருளினர். அவ் வருண்மொழியில் `போலும்ழு என்னும் திருமொழியில்லாமலே பொருள் பொருந்தும். அதனால், அம்மொழி கூடுதல் ஆம். உடம்பைப் பொருந்தும் சிறுதுயில் இல்லாமல் ஏற்கும் பெருந்துயிலே எமன் பொருந்தும் சாவு என வகைப்படுத்திச் சொல்லுதல் முறைமையாம். |
| சாக்காடு-சாவு. இறங்கலில்-குறைதல் இல்லாத; பெருகுகின்ற. மிகை-கூடுதல். நிறம்-உடல். அற்று-இல்லாமல். ஏல்-ஏற்கும். மறம்-எமன். வழக்கு-முறைமை. |
| 4 |
| ------ |