| நீதிநூல் |
| உணவின்றிச் சிலநாட்கள் பட்டினி யிருந்தாலும் நலமே உண்டாகும். வயிறு செரியாதிருக்கும்போது உண்ணும் தீனி நீங்கா நோயினைத் தரும். அந்நோய் நீங்குவதற்குப் பொடி முதலிய மருந்துகள் கிடையா. உண்மையாக அந்நோய் நீங்குவதற்குப் பட்டினி கிடத்தலே மருந்தாம். இதனால், காரண காரியங்களை அறிந்துணர்ந்து அளவாக உண்பவர் அறிவுடையோராவர். |
| பாரணம்-பட்டினி; உண்ணாநோன்பு. சீரணம்-செரித்தல். தீனி-விலங்குணவு. சூரணம்-பொடி; நீத்து மருந்து. காரணம்-செயல். காரியம்-பயன். |
| 3 |
| பொருந்தும் உணவால் திருந்தும் அகமும் |
368 | தகவுணும் அனமுண் டோனைத் தாங்குமால் வயிறு கீள மிகவுணும் அனத்தை உண்டோன் விறலொடு தாங்க வேண்டும் அகமுறும் அவனைப் பல்லோர் அனுதினஞ் சுமக்க வேண்டும் இகமுறும் அவனைப் பூமா தெவ்வணஞ் சுமப்பா ளம்மா. |
|
| வயிறு ஏற்றுக்கொள்ளும்படியாகச் சோறு உண்டவனை அச்சோறு தாங்கும். வயிறு ஏற்றுக்கொள்ளாது கிழியும்படிமிகுதியாக உண்டவன் அச் சோற்றினை வலிமையுடன் தாங்கவேண்டும். இம்மையே இன்பமிழந்து தீமை செய்யும் நன்மையற்றவனை நிலமகள் எப்படித் தாங்குவாள். |
| தக-பொருந்த. அனம்-அன்னம்; சோறு. கீள-கிழிய. விறல்-வலிமை. அனுதினம்-நாடோறும். இகம்-இம்மை. பூமாது-நிலமகள். சுமத்தல்-தாங்கல். |
| 4 |
| அற்றதறிந்து அளவூண் கொள்ளுதல் ஆக்கம். |
|
369 | மாந்தன மழிந்து தக்க மலசலங் கழிந்தூண் ஆவல் சார்ந்தபின் னுணுஞ்சிற் றுண்டி சபலமாம் மீதூண் உண்டு சோர்ந்திட அதைத்தான் தாங்கிச் சுமக்குதல் தன்னைத் தூக்க நேர்ந்தமா வினைத்தான் தூக்கி நெஞ்சம்புண் ணாதல்போலும். |
|