| பேருண்டி |
| உண்ட ஊண் செரித்து மலமும் சிறுநீரும் அளவுடன் வெளிப்பட்டு மேல் உண்ண வேட்கை உண்டாகி அதன்பின் உண்ணும் அளவூண் நற்பயனைத் தரும். அளவுக்கு மிஞ்சிப் பேர்ஊண் உண்டு, தளர்ந்து அவ்வூணைத் தான் தாங்கிச் சுமக்குதல், தன்னைச் சுமக்க வாய்ந்த குதிரை முதலியவற்றைத் தான் சுமந்து மனம் வருந்துவதோடு ஒக்கும். |
| மாந்துதல்-உண்டல். சலம்-சிறுநீர். ஆவல்-வேட்கை. சிற்றுண்டி-அளவூண். சபலம்-நற்பயன். மா-விலங்கு. |
| 5 |
| அகட்டில் பல்லுணவு அடைப்போன் அழிவன் |
370 | புட்களும் விலங்கு மொவ்வோ ரிரையையே புசிக்கும் மாந்தர் உட்கலி லாதி யாவும் உண்பரன் றியுஞ்சற் றேனும் வெட்கமில் லாத கட்டின் மிகமிக அடைப்பர் உப்பார் மட்கல மெனவன் னார்மெய் மட்கலாம் வட்க லாமால். |
|
| பறவைகளும் விலங்குகளும் ஒவ்வொரு வகைத் தீனியையே தின்னும். மக்கள் சிறிதும் அச்சமின்றிக் கண்டனவெல்லாம் உண்பர். மேலும், சிறிதும் நாணமில்லாது (தலையணையில் பஞ்சு திணிப்பதுபோல்) வயிற்றில் காற்றுக்கும் இடமில்லாமல் கூடக் கூடத் திணிப்பர். உப்பு நிறைந்த மண் ஏனத்தையொத்து, அவர்கள் உடம்பு ஒளிமழுங்கி அழிவெய்தும். |
| புள்-பறவை. புசிக்கும்-தின்னும். உட்கல்-அஞ்சுதல். வட்கல்-அழிவெய்தல். மட்கல்-ஒளி மழுங்கல். |
| 6 |
| ------ |