பக்கம் எண் :

175

 தற்புகழ்
 
 

மழைப்பயிர் வளம்போல் மன்னும் நற்புகழ்

374
நீரினால் பயிர்வளம் நிலைத்தல் போற்குணச்
சீரினால் புகழ்ப்பயிர் செழிக்க வேண்டும்நற்
பேரிலான் தற்புகழ் பிடித்தி ழுத்தரு
மாரியில் பயிரினை வளர்த்தல் மானுமே.
 

மழைநீரால் பயிர்வளம் நிலைக்கும். அதுபோல் குணச் சிறப்பால் புகழ் நிலைக்கவேண்டும். நன்மை செய்து நற்பெயர் பெறாதவன் தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளுதல், மழையால் செழித்துத் தானே நீண்டு வளர வேண்டிய பயிரைக் கையால் பிடித்து இழுத்து மழையில்லாமல் வளர்க்கத் தொடங்குவதை ஒக்கும்.

 தற்புகழ்-தன்னைத் தானே புகழ்தல். மானும்-ஒக்கும்.
 

4

 

நல்லொ ழுக்கமே நற்புகழ் பெறும்வழி

375
தற்புகழ் வோன்றனைப் பழிக்கும் தாரணி
சொற்புகழ் விரும்பிடான் தனைத்து தித்திடும்
நற்புகழ் பெறுவழி நன்ன டக்கையோடு
அற்பமுந் தற்புக ழாமை யாகுமே.
 

தன்னைத்தானே புகழ்பவனை உலகோர் பழிப்பர். தன் புகழைப் பிறர் கூறக் கேட்கவும் விரும்பாதவனை உலகோர் போற்றுவர். நல்ல புகழைப் பெறும் வழி நன்மை செய்தலும் சிறிதும் தற்புகழாமையுமாம்.

 அற்பமும்-சிறிதும்.
 

5

 

வேறு

 

தன்னை நெடிதாக்கத் தான் தூக்கல் தற்புகழ்தல்

376
துதிபெற ஆதர மிகலாலே
    தூயவ ராகுவர் கலைதேறி
மதியினர் ஆகுவர் அரிபோல
    வலியின ராகுவ ரேயேனும்
அதிதுதி பிறர்சொலின் அழகாகும்
    அமைவொடு தனதுதி தான்கூறல்
கதிதன துடலுயர் வுறவேதன்
    கைகொடு தூக்கிட வுனல்போலும்.