பக்கம் எண் :

176

  நீதிநூல் 
 
 

நற்புகழ் பெறவேண்டும் என்னும் பெருநசையுள்ளவர் உண்மை யொழுக்கத்தால் தூய்மை எய்துவர். கற்றறிவல்ல ஒண்மையராவர். அரிமாவையொத்த வலிமை யுடையவராயினும் தம் புகழ் பிறரால் சொல்லப்படுவதே அழகு. தாமே சொல்லுதல் தம்முடல் நெடிமை என்று காட்டத் தம் கையாலேயே தம்முடலைத் தூக்க நினைப்பதையே ஒக்கும்.

  அரிமா-சிங்கம்.
 

6

 

தன்னைத்தான் புகழில் இகழ்வே சாரும்

377
சடமதைக் கழுவ வுன்னிச்
    சகதியிற் றோய்தல் போலும்
சுடரினைத் தூண்ட வேண்டி
    யூதியே தொலைத்தல் போலும்
மடமையால் தன்னைத் தானே
    புகழுவோன் வசைக ளெல்லாம்
புடவியே யெடுத்து ரைக்கப்
    பூணுவன் நிந்தை யம்மா.
 

குளிக்க நினைத்துப் போய்ச் சேற்றில் மூழ்குதலும், விளக்கைத் தூண்ட விரும்பி ஊதி அணைத்தலும்போல, ஒருவன் அறியாமையால் தன்னைத்தானே புகழ்ந்துகொள்வானானால் உலகோர் அவனுடைய பழியை எடுத்துரைப்பர். அதனால் இகழ்வு பெறுவன்.

 சடம்-உடல். சகதி-சேறு. சுடர்-விளக்கு. தொலைத்தல்-அணைத்தல். வசை-பழி. நிந்தை-இகழ்வு. பூணுவன்-பெறுவன்.
 

7

 

வேறு

 

தற்புகழ்வோர் துரும்புபோல் தாந்திரிந் துழல்வர்

378
குலமணி வெளியு றாதாழ்
    குரவையூ டொளித்தி ருக்கும்
சலமிசை எவருங் காணச்
    சஞ்சரித் திடுந்து ரும்பு