பக்கம் எண் :

177

  புகழும் இகழும் மதியாமை
 
 
கலமென மானம் பூண்ட
    கலைவலோர் அடங்கி நிற்பர்
புலனில்சீத் தையர் தமைத்தாம்
    புகழ்ந்தெங்கும் திரிவர் மாதோ.
 

சங்கு முத்து பவழ முதலிய உயர்ந்த விலை வரம்பிலாப் பொருள்கள் கடலினுள் ஆழத்தில் அமைந்திருக்கும். விலையிலாத் துரும்பு நீரின் மேன்மட்டத்து அலைந்து திரியும். அதுபோன்று மானமே அணிகலனாகப் பூண்டோர் அடக்கமுடையராய்த் திகழ்வர். அறிவிலாக் கீழோர் தம்மைத்தாமே புகழ்ந்து உழல்வர்.

  அரிமா-சிங்கம்.
 

8

 

------

 

அதி. 37-புகழும் இகழும் மதியாமை

 

உலகோர் புகழிகழ் உள்ளவா றாகா

379
தன்றுணை யிலானே யுள்ளத்
    தன்மையை யறிவான் பூமி
இன்றொரு வனைத்து திக்கும்
    ஏசிடு மவனைப் பின்னும்
நன்றினைத் தீதென் றுன்னுந்
    தீதைநன் றென்ன வுன்னும்
பொன்றுமா னிடர்பு கழ்ச்சி
    புனலின்மேல் எழுத்துக் கொப்பே.
 

தனக்கொப்பிலாத முழுமுதலே ஆவிகளின் மனப்பாங்கை அறிவான். உலகோர் இன்று ஒருவனை மட்டின்றிப் புகழ்வர். அவனையே உடன் அளவின்றித் திட்டுவர். மேலும் நன்மையைத் தீமையெனக் கருதுவர். தீமையை நன்மை எனவும் கருதுவர். நிலையிலா மக்கள் புகழும் புகழ்ச்சி நீர்மேல் எழுத்தாம்.

 துணை-ஒப்பு. பூமி-உலகோர். புனல்-நீர்.
 

1

 நீ.-12