| நீதிநூல் |
| பிறர் சொலால் துன்புறுத்தும் நெஞ்சநஞ் சொக்கும் |
380 | வசையுமீக் கூற்று மற்றோர் வாய்வரு வாயு வல்லாற் பசையுள தோவக் காற்றைப் பாரிலோர் பொருளென் றெண்ணி இசையினான் மகிழ்வும் பேசும் இகழ்வினால் துயரும் உற்று நசையினால் கொல்லு நெஞ்சம் நஞ்சமே யொக்கு மாதோ. |
|
| நெஞ்சே! பழியும் புகழும் பிறர் வாயிலிருந்து வரும் காற்றாகிய வெற்றோசையல்லாமல், அதனால் ஒரு பயனும் இன்று. உலகத்தில் அவற்றைப் பொருள் எனக் கருதிப் புகழ்ச்சியால் இன்பும், இகழ்ச்சியால் துன்பும் கொள்கின்றாய். புகழ்ப்பற்றால் என்னைத் துன்புறுத்துகின்றாய். அதனால், நீ உயிர் கொல்லும் நஞ்சினையே ஒப்பாய். |
| வசை-பழி. மீக்கூற்று-புகழ். வாயு-காற்று. நசை-பற்று. |
| 2 |
| நாய்கழுதை புள்ளொலிபோல் நாடிடுக கொடுஞ்சொல்லை |
|
381 | சுணங்கனோர் பாற்கு ரைக்கும் சூழ்கரங் கத்து மோர்பால் பிணங்கியே புள்ளொ லிக்கும் பெரும்பறை யோர்பா லார்க்கும் இணங்கியிவ் வொலிக ளெல்லாம் ஏற்கின்ற செவியோர் தீயன் குணங்கெடக் கூறும் வன்சொற் கொண்டிடிற் குறையென் னெஞ்சே. |
|
| நெஞ்சே! ஒருபக்கம் நாய் குரைக்கும். கழுதை கத்தும். கோட்டான் முதலிய பறவை ஓசையிடும். பெரிய தோற்கருவிகள் முழங்கும். இவற்றையெல்லாம் பொருந்திக் கேட்கின்ற நம் காதுக்கு, ஒரு கொடியவன் கூறும் கடுஞ்சொல்லைக் கேட்பதால் வரும் தீங்கு என்ன இருக்கின்றது? ஒன்றும் இன்று. |
| சுணங்கன்-நாய். கரம்-கழுதை. புள்-பறவை. இணங்கி-பொருந்தி. |
| 3 |