பக்கம் எண் :

181

   
 

அதி. 38-கைம்மாறு கருதா உதவி

 

ஊண்மனை மருந் தின்பம் உறவாதல் உதவி

386
அனமிலார்க் கனமாய் வாழ
    அகமிலார்க் ககமாய்த் துன்ப
மனமுளார்க் குவப்பாய் நோயின்
   வருந்துவோர்க் கரும ருந்தாய்த்
தனமிலார்க் கரும்பொன் னாய்நற்
   றாய்தந்தை யிலார்க்கன் னாராய்
இனமிலார்க் கினமா யார்க்கும்
   யாவுமா யிசைத லன்பே.
 

உண்ணச் சோறிலார்க்குச் சோறு கொடுப்பவராய், உறைய வீடிலார்க்கு வீடு அளிப்பவராய்த், துன்புறுவார்க்குத் துன்பம் நீக்கி மகிழ்ச்சி விளைவிப்பவராய், நோயுற்றார்க்குச் சிறந்த மருந்து கொடுப்பவராய், செல்வமிலார்க்குப் பணம் ஈபவராய், நல்ல தாய் தந்தையர் இல்லாதார்க்கு அவ்வவர்களாய் நின்று உதவுபவராய், உறவு இலார்க்கு உறவினர் போன்று காப்பவராய் எல்லார்க்கும் வேண்டும் எல்லாம் வழங்குபவராய் வாழ்தலே அன்பாகும்.

  அனம்-சோறு. அகம்-வீடு. தனம்-பணம். இனம்-உறவு.
 

1

 

ஏழைகட்கு உதவாது இருப்பது இழுக்கு

387
அருந்தவே கூழும் பூண
    ஆடையும் வீடும் இன்றி
வருந்துவோர் எண்ணி லார்நம்
    மருங்குளா ரெனவ றிந்தும்
விருந்திடாய் மணிமா டத்து
    மேவிநீ யொருவன் வாழப்
பொருந்தினாய் மனமே மக்கட்
    போலிநீ விலங்கானாயே.
 

உண்பதற்குக் கூழும் உடுப்பதற்கு உடையும் உறைவதற்குக் குடிலும் இல்லாமல் வருந்துகின்ற பாட்டாளிமக்கள் அளவில்லாதவர் நம் அருகில் இருக்கின்றனர். அவர்கள் நிலையினை உணர்ந்