பக்கம் எண் :

182

  நீதிநூல்
 
 

தும் அவர்கட்கு வேண்டும் உதவி செய்கின்றாயில்லை. அழகிய மாளிகையின்கண் பொருந்தி நீ ஒருவனாக வாழ மனம் இணங்கினாய். நீ மக்கட்பதரும் இரக்கமற்ற கொடு விலங்கும் ஆவாய்.

 

மருங்கு-பக்கம். விருந்து-உதவி. மக்கட்போலி-மக்கள் போன்று காணப்படுவது.

 

2

 

ஊண் உடையின் மிச்சமெலாம் உதவுவோர் வீடடைவர்

388
ஏவல்செய் வோர்க்குக் கூலி
    யிடைத்துகி லுணவாம் யாமோர்
காவல னெனினுஞ் சோறு
    கலையன்றி யொன்றுங் காணோம்
ஆவலாய்ப் பொருளை யீட்டி
    அயலவர்க் காச்சு மந்தோம்
ஈவதை மேற்கொண் டேமேல்
    இணையில்வீ டடைவோ நெஞ்சே.
 

இட்ட பணியை இயற்றும் வேலையாட்களுக்குக் கிடைக்கும் கூலிப்பயன் இடுப்பில் கட்ட உடையும், வயிற்றுக்கு உணவுமேயாம். உலகமெல்லாம் ஆளும் மன்னர் மன்னனே எனினும் உண்ணச்சோறும் உடுக்க உடையுமின்றி மிகுதியாக அடைவது ஒன்றும் இன்று. அளவில்லாத ஆசையொடும் பணத்தைத் தேடிப் பிறர் பொருட்டுச் சுமக்கின்றோம். வீண்சுமை சுமவாது அப்பணத்தால் வேண்டுவார்க்கு வேண்டுவது கொடுக்கும் ஈகையை இடையறாது செய்து வருவோமானால் இசைபட வாழ்ந்து ஊதியமாம் பேரின்பப் பெருவாழ்வையும் பெறுவோம்.

  ஏவல்-இட்டபணி. இடை-இடுப்பு. காவலன்-மன்னர் மன்னன். கலை-உடை. ஆவல்-அளவிலா ஆசை. அயலவர்-பிறர். இணை-ஒப்பு..
 

3

 

கையேந்தும் ஏழைபோல் கடவுளும் வருவன்

389
சாந்தமார் வறியர் போலத் தற்பரன் வருவான் தாவென்று
ஏந்துகை வீடு கொள்ளென் றேந்துகை யாமக் கையில்
ஈந்தபொன் விலைபோல் வீட்டுக் கிட்டபொன் னாமன் னாரைக்
காய்ந்திலை யென்போர் வேண்டோங் கதியென்பார் போலுமாதோ.