பக்கம் எண் :

183

 கைம்மாறு கருதா உதவி 
 
 

பொறுமைமிக்க ஏழைபோன்று முழுமுதற்கடவுள், கோலங்கொண்டு எழுந்தருள்வன். ஒன்றுவேண்டித் தருக என்று கூறிக் கை ஏந்துவன். அக் கை நமக்கு வேண்டிய பேரின்ப வீட்டைப் பெற்றுக்கொள்க, என்று ஏந்திய கை ஆகும். அக் கையில் விருப்புடன் கொடுத்த பொருள், அவ்விட்டுக்கு நல்கிய விலைப்பொருளாகும். அன்னவர்களை வெறுத்துச் சினந்து இல்லையென்று கூறுவோர், வீடு வேண்டாமென்று மனமாரச் சொல்லும் வீணரேயாவர்.

 

சாந்தம்-பொறுமை. தற்பரன்-கடவுள். காய்ந்து-சினந்து. கதி-வீடு.

 

4

 

ஈவோர்க் கின்பும் ஈயார்க்குத்துன்பும் ஈவர் இரப்போர்

390
இரவலர் தம்மை யெள்ளும் ஏழைகாள் இயம்பக் கேளீர்
நரகைமோக் கத்தை விற்க நண்ணிய வணிகர் அன்னார்
பரகதி அவரைத் தாங்கும் பண்பினார்க் கீவர் அள்ளல்
கரவுளார்க் கீவர் என்னின் அவர்கதை கழற லென்னே.
 

இரந்துண்போரை இகழும் அறிவிற் குறைந்தவர்களே! உங்களுக்கு ஒன்று சொல்லுகின்றேன், கேளுங்கள். அவர்கள் நிரயம் வீடு என்னும்கிடையாப் பெரும் பொருள்களை விற்கும் செட்டிகளாவர். அவர்க்கு வேண்டுவன கொடுத்துப் பாதுகாக்கும் நல்ல தன்மையுடையார்க்கு வீட்டினை நல்குவர். இயல்வது கரக்கும் தீத்தன்மையுடையார்க்கு நிரயத்தைக் கொடுக்கின்றனர். அதனால், அவர் நிலைமையைப்பற்றி என்ன சொல்லுவது? (மிகப் பெரியவரென்க)

 இரவலர்-பிச்சையெடுப்போர். எள்ளும்-இகழும். ஏழை-அறிவிற் குறைந்தார். நரகம்-நிரயம். மோக்கம்-வீடு. வணிகர்-செட்டியார். பரகதி-வீடு. அள்ளல்-நிரயம். கரவு-ஒளிப்பு. கதை-நிலைமை.
 

5

 

புகழும் நாடாது செய்வதே புண்ணியம்

391
பிறர்புக ழினைக்கைம் மாற்றைப் பேணியே யுதவி செய்வோர்
அறமுளா ரல்லர் நித்தன் அருட்குமே யருக ரல்லர்
திறவலக் கரஞ்செய் நன்றைத் திகழிடக் கரங்காணாமல்
வறியர்பாத் திரமறிந்து வழங்குவோர் மாட்சி யோரே.
 

பிறர் கூறும் இசையையோ, வேறு பல உதவியையோ நாடி நன்மை செய்வோர் அறவோர் ஆகார்; அழியா ஆண்டவன்