பக்கம் எண் :

186

  நீதிநூல்
 
 

பிறர்க்குள்ளன நமக்கென்று உதவுவோர் பேரன்பர்

396
சீவ அன்பு சுகுணங் களின்முதலாம்
    தீதி லன்பை யுடையோர் பிறர்துயர்தம
தாவ தென்ன அயர்வார் பிறர்சுகமும்
   தம்ம தென்ன மகிழ்வார் தினம் வணிகர்
மேவ லோடு கொளுவோர் வரவுன்னும்
   விதமெ னத்தம சகாய மதுறவே
யாவர் சார்வ ரெனவா சையினோக்கி
   ஏன்ற மட்டு நலமே புரிவாரால்.
 

உயிருக்கு அமைந்துள்ள அன்பு நல்ல பண்பு முதலியவற்றில் சிறந்த அன்பையே உயிராகக் கொண்டுள்ளோர், பிறர் படும் துன்பம் தம்மதாகக்கொண்டு மனங் கவல்வார். பிறர் கொள்ளும் இன்பத்தைக் கண்டு அதுவும் தம்மதெனவே கொண்டு மகிழ்வார். நாள்தோறும் செட்டிகள் விழைவுடன் பண்டம் வாங்க வருவோர் வரவையே நினைக்கும் முறைபோல் தம்முடைய கைம்மாறு கருதாத உதவியைப் பெற்றுக்கொள்ள வருவோர் யாவர் என்று விருப்பத்துடன் வழி பார்த்திருந்து ஒல்லும் வகை நல்லதே செய்வர்.

  சுகுணம்-நல்ல பண்பு. தாவு-வருத்தம். அயர்வார்-மனங் கவல்வார். மேவல்-விருப்பம். உன்னும்-நினைக்கும். ஏன்றமட்டும்-ஒல்லும்வகை. புரிவார்-விரும்பிச் செய்வார்.
 

11

 

வேறு

 

அன்பின்றேல் பேரின்பம் அடையார் யாரும்

397
எவ்வருணர் எச்சமயர் எப்பதியர்
    எத்தொழிலர் எனினும் நாணோடு
அவ்வவர்க ளெவ்வமுரை யாமுன
    முணர்ந்துதவல் அன்பின் நிலையாம்
இவ்வரிய அன்புடைமை யின்றிநிரு
    வாணமுற எண்ணி விழைதல்
பௌவவுல கத்துருளில் தேரினைந
    டாத்தவுனு பான்மை நிகரால்.
 

எவ்வகைக் குலத்தினரும் எவ்வகைக் கொள்கையரும் எவ்வகை ஊரவரும் எவ்வகைத் தொழில் செய்வோரும் தங்கள் மானத்தைவிட்டுத் தங்களுக்கு ஓர் உதவி வேண்டும் எனக் கூறு