பக்கம் எண் :

187

 கைம்மாறு கருதா உதவி 
 
 

வதன்முன் குறிப்பாலுணர்ந்து செய்தல் அன்பு நிலையாகும். இத்தகைய சிறந்த அன்பில்லாமல் வீடடையக் கருதி விரும்புதல் கடல்சூழ்ந்த உலகத்தில் சக்கரமில்லாத தேரைச் செலுத்த நினைப்பதை யொக்கும்.

 வருணம்-குலம். சமயம்-கொள்கை. பதி-ஊர். நாணம்-மானம். எவ்வம்-துன்பம். நிருவாணம்-வீடு; பேரின்பம். பௌவம்-கடல். உருள்-சக்கரம்.
 

12

 

வேறு

 

துன்பந் துடைப்போர் கலைதேர் தூயோராவர்

398
கலைதேர் கழகமோ டனநீர் தருமனை
    கயமா மதகுகள் வழிசாலை
நிலையா லயநலி யினர்வா ழிடமுதல்
    நிருமா ணமதுற நெறி மேவி
உலைவால் வருபவர் துயரே கெடவவர்
    உளமா னதுமகிழ் வொடுதேறக்
கலையூ ணகமுத லினிதீ குவர்வளர்
    கலையோர் நிலையுறு தலையோரே.
 

பள்ளிக்கூடம், சோறும் தண்ணீரும் வரையாது வழங்கும் வீடு, குளம் முதலிய நீர்நிலைகளிலுள்ள நீர் போக்குவரத்துக்குரிய வாயில், நடைவழி பெருவழி, அழிவில் முதல்வன் திருக்கோவில், துன்புற்றார் தங்குமிடம் முதலியவற்றை ஏற்படுத்தி அவற்றின்கண் துன்பம் நீக்கிக்கொள்ள வருபவர்களுடைய துன்பங்கெட உள்ளம் மகிழ்ந்து தெளிவு எய்தக் கல்வி உணவு உறையுள் முதலியன இனிமையுடன் கொடுப்பர் உண்மை நூலைத் தெளிந்து அவ்வழி நடக்கும் சிறந்தோர்.

 கயம்-குளம். மதகு-நீர் போதற்கும் வருதற்கும் வாய்ந்த மடை. நலியினர்-துன்புறுவோர். நிருமாணம்-ஏற்பாடு; அமைப்பு. தலையோர்-சிறந்தோர்.
 

13

 

வேறு

 

ஆண்டவன் அருள் பொருள் அனைவர்க்கும் பொதுவே

399
எல்லோருங் கொளவே பரமன் எண்ணில் பொருளீந்தான்
சில்லோர் யாவும் வவ்வி ஒளிக்குபு தீமைகள் செய்தலினால்
பல்லோ ரில்லோராய்ப் பசிப்பிணி பாய்ந்துள நைவார்கள்
சொல்லோர் நல்லோர்தாம் இல்லோரைக் கைதூக்கி அளிப்பாரால்.