| நீதிநூல் |
| குளமும் யாறும் மழையினிடத்து வேண்டிப் பெற்றும் நீரை வயல்களெங்கும் நிறைத்து வைக்கும். அதுபோல், நன்மை நாடும் நல்லோர்கள் எவரிடத்து இரந்தும் ஏழைகள் இருக்கும் இடத்தைப் போய் ஆராய்ந்து பகுத்து உண்டு பயன் பெறுவர். |
| கார்-மழை. இரத்தல்-வேண்டிப்பெறுதல். கயம்-குளம். பணை-வயல். அறம்-நன்மை. பார்-உலகம். |
| 19 |
| வேறு |
| ஆல்போல் பிறர்க்கு நன்மை ஆற்றுவர் நல்லோர் |
405 | சாடுவெங் கோடையைத் தலையிற் றாங்கியும் மாடுளோர்க் கருநிழல் வழங்கும் ஆலெனக் கேடுதம் பான்மிகக் கிளைக்கி னுங்குணப் பீடுளோர் நன்மையே பிறர்க்குச் செய்வரால். |
|
| ஆலமரம் தன்மேல் மோதும் கடுமையான கோடை வெயிலைத் தாங்கித் தன்பக்கம் வருவார்க்கு அருமையான குளிர்ந்த நிழலைத் தருவதுபோல், நற்பண்பு வாய்ந்தவர் பொருளிழப்புத் தமக்கு மிகுதியாக நேர்ந்தாலும் பிறர்க்கு நன்மையே செய்வர். |
| சாடுதல்-மோதுதல். கேடு-பொருளிழப்பு. குணம்-பண்பு. பீடு-பெருமை. |
| 20 |
| பிறர்க்குதவி இன்பம் பெறுவர் மேலோர் |
|
406 | இதமிலா வுலோபர்தம் பொருளை யெண்ணியே மதமொடு நாடொறு மகிழ்வர் மேலவர் பதவிதீர் மிடியர்க்குப் பரிவிற் றாஞ்செயும் உதவியை யுனுந்தொறும் உளங்க ளிப்பரே. |
|
| நன்மையில்லாத கடும்பற்றுள்ள இவறியர் நாள்தோறும் பயனில்லாத எண்ணிக்கைப் பெருக்கமுள்ள தம் பணத்தையே பெரிதாக நினைந்து செருக்குற்றுப் பொய்யின்ப மகிழ்ச்சி அடைவர். பிறர் நலம் பேணும் சான்றவர் நிலையில்லாத ஏழைகட்கு மிகுந்த அன்புடன் தாம் செய்யும் உதவியை நினைக்கும்பொழுதெல்லாம் மெய்யான உள்ளத்துவகை அடைவர். |
| இதம்-நன்மை. உலோபர்-இவறியர். மதம்-செருக்கு. பதவிதீர்-நிலையில்லாத. மிடியர்-வறியர். பரிவு-பேரன்பு. களிப்பு-உவகை. |
| 21 |