| நீதி நூல் |
| துன்பெலாம் பெருக்குபொருள் தூயபொருள் ஆகா |
409 | ஒப்பருநற் குணத்தவர்க்குங் கொலைகாமங் கட்களவை யுபதே சிக்கும் அப்பனாய் நட்பினர்க்குட் பகைவிளைக்குஞ் சத்துருவா யகிலத் துற்ற செப்பரிய துயர்க்கெல்லா மாதாவாய்த் தீவினைக்கோர் செவிலி யாய இப்பொருளை நற்பொருளென் றெப்படிநீ யொப்புகின்றா யேழை நெஞ்சே. |
|
| அறிவில்லாத நெஞ்சே! ஒப்புச்சொல்ல முடியாத சிறந்த நல்ல பண்புகளை யுடையவர்க்கும் கொலை காமம் கள் களவு (பொய்) முதலிய பெருந் தீமைகளை மனத்தழுந்தப் போதிக்கும் அத்தனாய், நண்பர்களுக்குள் பகையை விளைவிக்கும் மாற்றானாய், சொல்லமுடியாத உலகியல் துன்பங்கட்கெல்லாம் அன்னையாய், கொடுஞ் செயலுக்கெல்லாம் வளர்ப்புத் தாயாய் இருக்கும் இப்பொருளை இன்பமும் துணையும் இசைவிக்கும் நல்ல பொருளென்று நீ எந்த முறையாகக் கூறுகின்றாய். |
| குணம்-பண்பு. சத்துரு-மாற்றான். மாதா-அன்னை. ஏழை-அறியாமை. |
| 2 |
| உடற்பயனை ஒழிக்கும் பொருள் உயர்பொருளாகா |
410 | நோக்கிருந்தும் அந்தகராக் காதிருந்துஞ் செவிடரா நோயில் லாத வாக்கிருந்து மூகையரா மதியிருந்தும் இல்லாரா வளருங் கைகால் போக்கிருந்தும் முடவரா வுயிரிருந்தும் இல்லாத பூட்சி யாரா ஆக்குமிந்தத் தனமதனை யாக்கமென நினைத்தனைநீ யகக்கு ரங்கே. |
|
| நெஞ்சமாகிய வஞ்சகக் குரங்கே! நீ கண்ணிருந்தும் குருடராய்க், காதிருந்தும் செவிடராய்க், குற்றமற்ற வாயிருந்தும் ஊமையராய், அறிவிருந்தும் மூடராய், நீண்ட கைகால்களிருந் |