| பொருளாசை யொழித்தல் |
| தும் முடவராய், உயிரிருந்தும் அஃதில்லாத வெற்றுடலினராய்ப் பயனிழக்கச் செய்யும் தீப்பொருளை வளரும் செல்வமாம் வாழ்வென நினைத்தனை. |
| நோக்கு-கண். அந்தகர்-குருடர். மூகை-ஊமை. பூட்சி-உடல். அகம்-மனம்; செருக்கு; நெஞ்சம். |
| 3 |
| செல்வர்பால் கூற்றுவன் சேர்வது இன்றோ? |
411 | நிறைசெல்வ முடையாரை நோய்துன்ப மணுகாவோ நினைத்த தெல்லாங் குறையின்றிப் பெறுவரோ புவிக்கரசு செலுத்துவரோ குறித்த வாயுள் பிறையென்ன வளருமோ இயமன்வர வஞ்சுவனோ பேரின் பத்துக்கு உறையுளோ அவர்கிரக மிவையெலா மனமேநீ யுன்னு வாயே. |
|
| நெஞ்சே! நிறைந்த செல்வமுடையாரைப் பசிநோய் உடல்நோய் துன்பம் முதலியன அணுகாவோ? நினைத்ததெல்லாம் குறைவில்லாமல் பெறுவாரோ? உலகுக்கு மன்னராய் ஆள்வரோ? வரையறுக்கப்பட்ட அகவை பிறைபோன்று வளர்ச்சி யுறுமோ? இவரிடம் கூற்றுவன் வர நடுங்குவனோ? இவர் தங்குமிடம் அழியா இன்பத்துக்கு உறையுளோ? இவையனைத்தையும் கருதிப் பார்ப்பாயாக. |
| ஆயுள்-அகவை. இயமன்-கூற்றுவன். உன்னு-கருது. |
| 4 |
| களவுங் கூத்தும்போல் அழியும் வாழ்வு |
412 | கனவதனிற் கண்டபொருள் செலவுக்கா மோகுனிக்குங் கங்குற் கூத்தில் இனரமைச்ச ரென வேடம் புனைந்தவர்தம் மாணையெங்கு மேகு மோவிண் கனமின்போ லொழியுமந்தப் புவிவாழ்வு நிலையென்னக் கருதிக் கோடி* நினைவுற்றா யுடல்வீழி னென்செய்வா யறிவில்லா நெஞ்சக் கல்லே. |
|
| *ஒருபொழுதும். திருக்குறள் 337 |
| நீ.- 13 |