| நீதி நூல் |
| அறிவில்லாத கல்லைப்போன்ற வலிய நெஞ்சே! கனவில் கண்ட பொரு கைச்செலவுக்கு ஆகுமோ? முறையுணர்த்த ஆடும் இராக்கூத்தாகிய நாடகத்தில் வேந்தர் அமைச்சர் எனக் கோலம்பூண்டவருடைய அரசவாணை எல்லாவிடங்களிலும் நடக்குமோ? வானத்து மழையின்கண் காணப்படும் மின்னலைப் போல் தோன்றி மறையும் உலக வாழ்வை நிலையென்று கருதி அளவில்லாத தீய எண்ணங்களை நினைக்கின்றாய். உடல் மாண்டு விழுந்தால் என்ன செய்வாய்? |
| குனித்தல்-ஆடல். இனர்-வேந்தர். கனம்-மழை. புவி-உலகம். |
| 5 |
| வெள்ளி, பொன், பொருளெலாம் வெறுமண் குவியலே |
413 | பஞ்சபூ தங்களைவிண் டாரகையைத் தண்மதியைப் பானுத் தன்னைக் கொஞ்சமும்நம் பொருளெனவுன் னாமல்வெள்ளி பொன்னெனுமட் குப்பை தன்னைத் தஞ்சமாம் பொருள்களென நினைத்ததன்மே லாசையுற்றுத் தயங்கு கின்றாய் நெஞ்சமே யுனைப்போலு மறிவீனர் தேடினுமிந் நிலத்தி லுண்டோ. |
|
| மனமே! ஐம்பூதங்களை, விண்மீன்களை, திங்களை, ஞாயிற்றைச் சிறிதேனும் நம்முடைய பொருள்கள் எனக் கருதாமல், வெள்ளி, பொன் என வழங்குகின்ற மண் குவியலை நம்மைக் காக்கும் பொருள்கள் என எண்ணி அவற்றின்மேல் அவாக் கொண்டு வாடுகின்றாய். உன்னைப்போலும் அறிவில் குறைந்தார் இவ்வுலகெலாம் ஆராயினும் உண்டாகார். |
| தாரகை-விண்மீன். தயக்கம்-வாட்டம். |
| 4 |
| எல்லா மக்களும் சுற்றம் இவ்வுலகம் வீடே |
414 | பூதலநம் மில்லம்வான் மேற்பந்தர் சசிகதிர்மீன் பொற்றீ பங்கள் சீதநீர்க் கடம்விருட்சா திகணம்பூம் பொழிலுலகின் செல்வ மெல்லாம் |
|