| பொருளாசை யொழித்தல் |
| வீதமா நமதுமக்கள் யாவருநஞ் சுற்றமென வியந்துன் னாமற் பேதஞ்செய் துழல்கின்றாய் நெஞ்சமே யுனைப்போலும் பித்த ருண்டோ. |
|
| மனமே! உலகம் நம்முடைய பொது வீடு. விசும்பு அவ் வீட்டின் மேலுள்ள பந்தல், திங்கள் ஞாயிறு விண்மீன் அழகிய விளக்குகள். குளிர்ந்த நீர்க்குடம் பல்வகை மரங்கள். அழகிய சோலை உலகத்தின் இனிய செல்வங்கள். இவை யாவும் நமக்குரிய பங்காகும். மக்கள் எல்லாரும் உறவுமுறையாவர். இவ்வகையாகப் பெருமகிழ்வோடு நினையாமல், வேற்றுமை காட்டி வருந்துகின்றாய். உன்னைப்போல் அறிவு திரிந்தார்-கிறுக்கர்-எவரும் இலர். |
| சசி-திங்கள். பொன்-அழகு. கடம்-குடம். பொழில்-சோலை. வீதம்-பங்கு. பேதம்-வேற்றுமை. |
| 7 |
| செல்வம் ஐம்பூதம் ஆண்டான் திருத்தந்தை |
415 | பூதமதி னொன்றுநமைத் தாங்குமன்னை யொன்றுநாம் புசிக்கு முண்டி மாதரையி லொன்றுரிய சமையலாளொன்று நம்மெய் வளச்சாந் தாற்றி பேதமின்றி மற்றொன்று நாமூரும் வாகனமாம் பின்னு மாதி நாதனே தந்தையெனிற் செல்வமிது போலுமுண்டோ நவிலாய் நெஞ்சே. |
|
| மனமே! ஐம்பெரும் பூதங்களுள் நிலம் நம்மைத் தாங்கும் தாய். நீர் நாம் உண்ணும் உணவு முதல் தீ நமக்கு உணவினைச் சமைக்கும் சமையலாள். காற்று நம் உடம்பில் மெல்லிய காற்றுப் படும்படி வீசும் விசிறி. வானம் நாம் போக்குவரவு செய்ய இடந்தரும் ஊர்தி. மேலும் ஆதிபகவனாகிய முழுமுதலே தந்தை. அதனால், இவைபோலும் செல்வம் வேறுண்டோ சொல்வாயாக. |
| சாந்தாற்றி-விசிறி |
| 8 |