பக்கம் எண் :

196

  நீதி நூல்
 
 

       ஊண் உடைமேல் உள்ளபொருள் ஒல்லாச் சுமை மயக்கே

416
மண்டுபெருந் தனமிருந்துங் கண்டுமகி
    ழுவதல்லான் மயல்போன் முற்றும்
உண்டுவிட வொண்ணுமோ நினைவிற்கும்
    பஞ்சமோ உலகந் தன்னிற்
கண்டபொரு ளத்தனையு மெமது செல்வர்
    அப்பொருளைக் காத்தெ மக்குத்
தொண்டுசெய்வோ ரெனவுன்னி மகிழ்வுற்றால்
    தலைபோமோ சொல்லாய் நெஞ்சே.
  உள்ளமே! அளவிடப்படாத செல்வமிருந்தும், அதனைக் கண்டு மகிழ்ந்து மயக்கங்கொள்வர் மக்கள். அம்மயக்கம்போல் முற்றும் உண்ணுதற்கு முடியுமோ? கருதுவதற்கும் தடையும் முட்டுப்பாடும் உளவோ? உலகத்தில் காணப்படும் பொருள் முழுவதும் நம்முடையதே. செல்வர்கள் அப்பொருளைக் காத்து நாம் வேண்டும்போது நமக்குத் தந்து பணிசெய்யும் தொண்டர்கள். இப்படி நினைத்து நாம் உவகை கொண்டால், நம்முடைய தலை போய்விடுமோ? சொல்வாயாக.
  தனம்-செல்வம். மயல்-ஆசையாலமிழ்தல்.
 

9

  நம்மைவிட் டகல்பொருளை நல்லார்க்குக் கொடுத்தல் நலம்
417
எத்தனைபேர் கையின்முன்ன மிப்பொருடா
    னிருந்ததவ ரெல்லாந் தத்தம்
அத்தமென நம்பினா ரவர்களைவிட்
    டகன்றுன்கை யமர்ந்த தின்னுஞ்
சத்தமின்றி யுனைமோசஞ் செய்தனந்தம்
    பேர்கரத்திற் சாருஞ் சொன்னேன்
சித்தமே யதுசெல்லு முன்னீசற்
    பாத்திரத்திற் செலவி டாயே.
  நெஞ்சமே! இப்பொருள் இதன்முன் எத்தனைபேர் கையில் இருந்தது. அவரவரும் இதனைத் தத்தம் பொருளென்றே நம்பி யிருந்தனர். அவர்களை விட்டகன்று உன் கையில் வந்திருக்