| பொருளாசை யொழித்தல் |
| கிறது. இஃது ஓசையின்றி உன் நம்பகத்தைக் கெடுத்து, பலர் கையில் சார்ந்துவிடும். நான் கூறுவதை நம்பு. இப்பொருள் உன்னை விட்டகலுமுன் நீ நல்லவர்க்குக் கொடுக்கும் நற்செயலைச் செய்வாயாக. |
| அமர்தல்-போக்கிடமின்றியிருத்தல். சப்தம்-ஓசை. மோசம்-நம்பிக்கைக் கேடு. அனந்தம்பேர்-பலபேர். சித்தம்-மனத்தின் எண்ணும் நிலை. சற்பாத்திரம்-நற்பண்புடைமை. |
| 10 |
| செல்வமெனப் பெயரிடலால் சிலர் வறுமைப் பேர்பெற்றார் |
418 | கதிரவனா லொளியுறும்பல் வகைக்கல்லை மணியென்றுங் காமர் மண்ணை நிதிவெள்ளி யுலோகமென்றும் பெயரிட்டும் விலையிட்டும் நிகழம் மண்ணால் சதியான காசுபண மெனச் செய்துந் தரையின்மிடி தனைய மைத்தோர் மதியிலா நரரன்றிக் கடவுளோ சொல்லுவாய் மருள்சேர் நெஞ்சே. |
|
| மயக்கங்கொள்ளும் நெஞ்சே! ஞாயிற்றின் ஒளியினால் விளக்கமுறும் கற்களை ஒளிக்கற்களென்றும், அழகிய மினுக்கமுள்ள மண்ணைச் செம்பொன் வெண்பொன் என்று பெயரும் மதிப்பும் அமைத்துப் பின் அழிவுறும் காசு பணமெனச் செய்தும், இவையில்லாதார் வறியரென்றும் ஆக்கியவர் அறிவிலா மக்களே ஆவர். கடவுளோ சொல்லுவாயாக. |
| கதிரவன்-ஞாயிறு. மணி-ஒளிக்கல். (இரத்தினம்) உலோகம்-பொன்முதல். சதி-அழிவு. முடி-வறுமை. மருள்-மயக்கம். |
| 11 |
| தேவைக்குமேல் செல்வமெலாம் சேர்ப்ப தெதன்பொருட்டு |
419 | தரையெலா நமதெனினு மிருப்பிடமோர் முழமேநற் றானி யங்கள் வரையென்னக் குவிந்துகிடந் தாலுமுண்ப தரைநாழி வளர வாவால் |
|