| நீதி நூல் |
| திரைகட லெலாம்பருக உன்னுநா யெனநமக்குத் தேவை யில்லாக் கரையினிதி காணிதா னியங்கள்நீ வேட்டதென்ன கருத்தே சொல்லாய். |
|
| நெஞ்சே! உலக முழுவதும் நமது என்றாலும் நாமிருப்பது ஒரு முழ இடமே. கூலங்கள் மலை போல் குவிந்து கிடந்தாலும் நாம் உண்பது சிறுபடிக்கு அரைப்படி யுணவே. பேராசையால் கடல் நீர் முழுவதும் குடிக்க நினைக்கும் நாய்போன்று, அளவில்லாத பொருள் நிலம் கூலம் முதலியவற்றைத் தேவையில்லாமல் நீ விரும்பியது எதன் பொருட்டு? |
| தரை-உலகம். கரையில் நிதி-அளவில்லாத பொருள். காணி-நிலம். தானியம்-கூலம். கருத்து-நெஞ்சு. |
| 12 |
| மிகுபொருள் படைத்தோர்க்குத் துன்பம் மிகுமே |
420 | பொலமிகவுள் ளார்க்குணவின் சுவையின்று பசியின்று புசிக்கு மன்னம் அலமாய றாதோயாக் கவலைபிணி பிடகர்பலர் அருகில் வேண்டும் பலருடலைத் தாங்கினுமோ சுமக்கரிதூர்ப் பகைபயமிப் பையு ளெல்லாம் இலருறுக ணாளரெனிற் செல்வரெவர் மிடியரெவ ரியம்பாய் நெஞ்சே. |
|
| மனமே! பொன் மிகப் படைத்தவர்க்கு உணவின் சுவை தோன்றாது. பசியிராது. உண்ட உணவும் செரிக்காமல் துன்பம் தரும். எப்பொழுதும் நீங்காக் கவலையும் நோயும் அடைவர். அதனால் மருத்துவர் பலர் கிட்டவே இருத்தல் வேண்டும். அவர்கள் உடலைப் பலர் தாங்கினாலும் எழுந்து நடக்க முடியாது. ஊரார் பகையுண்டாம். அச்சம் மிகுதியாகும். இவ்வகைத் துன்பமெல்லாம் வறியோர்க்கு இல்லை. ஆதலால் இன்புறும் செல்வர் யார்? துன்புறும் வறியர் யார்? சொல்லுவாயாக. |
| பொலம்-பொன். அன்னம்-சோறு. அலம்-துன்பம். அறல்-செரித்தல். கவலை-மனக்கலக்கம். பிடகர்-மருத்துவர். பயம்-அச்சம். உறுகணாளர்-வறியர். மிடியர்-வறியவர். இயம்பு-சொல்லு. |
| 13 |