பக்கம் எண் :

200

  நீதி நூல்
 
 

மறைந்த கூற்றை மனங்கொண்டு வாழ்க

423
வையாற்செய் புணைநம்பி யனலாழி
  கடக்கவுன்னும் மதியி லார்போல்
பொய்யாற்செய் மெய்நம்பி யேதேதோ
  நினைவுற்றாய் புரைசேர் நெஞ்சே
பையவோர் புட்பிடிக்கக் ககனமிசை
  வட்டமிடும் பருந்து போல
ஐயோகூற் றுனைப்பிடிக்க அற்றம்பார்த்
  தொளித்துநின்ற தறிகி லாயோ.
  குற்றமுள்ள மனமே! வைக்கோலால் செய்த தெப்பத்தை நம்பித் தீயாலாகிய கடலைத் தாண்டிக் கரை சேரக் கருதும் அறிவிலாரைப்போல் நிலையில் பொருள்களால் செய்த உடம்பை நிலையுடையதென நம்பி என்னென்னவோ எண்ணுகின்றாய். பருந்து ஒரு பறவையைப் பிடிப்பதற்காக வானத்தில் மெதுவாகப் பறப்பதுபோல், ஐயோ! நடுவன் உன்னைப் பிடிக்க நேரம் பார்த்து மறைந்து நிற்கின்றான். நீ இதை அறிந்திலையே.
  வை-வைக்கோல். புணை-தெப்பம். அனலாழி-தீக்கடல். பொய்-நிலையாதது. மெய்-நிலைப்பது. புரை-குற்றம். பைய-மெதுவாக. புள்-பறவை. ககனம்-வானம். கூற்றுவன்-நடுவன். அற்றம்-நேரம்.
 
2
 

மலமிகும் உடலை மதிப்பது மயக்கே

424
தினமும்விரே சனங்கொளினு மோயாமன்
   மலமாரி திரளாப் பெய்யுங்
கனம்போலுந் தேகமிதைப் பிரித்துநோக்
   கிடின்மலநீர் கசியுஞ் செந்நீர்
இனமாலை தோலென்பு தசைநரம்பு
   குடரன்றி யினிவே றுண்டோ
மனமேநீ யிதையுமொரு பொருளென்ன
   வுன்னவென்ன மருளுற் றாயே.
  நெஞ்சே! நாள்தோறும் மலங்கழிகைக்கு மருந்து உண்டாலும் விடாமல் மலம் மிகுதியாகப் பெய்யும். பொன்போலப்