பக்கம் எண் :

201

  யாக்கை நிலையாமை
 
  பொலியும் இவ் வுடம்பைப் பாகுபடுத்தி ஆராய்ந்தால், மலம், கசியும் சிறுநீர், குருதி, தோல், எலும்பு, சதை, நரம்பு, குடல் அல்லாமல் வேறு என்ன இருக்கின்றது. நீ இதை மதிக்கத்தகுந்த ஒருபொருளாக நினைக்க ஏதும் மயக்கம் கொண்டாயோ?
  தினமும்-நாள்தோறும். விரேசனம்-மலங்கழிக்கு மருந்து. கனம்-பொன். தேகம்-உடம்பு. மருள்-மயக்கம்.
 

3

  உயிர்நீங்கின் மக்களுடல் ஒன்றுக்கும் பயனாகா
425
மாடாடு விலங்கிறப்பிற் றசைமயிர்தோல்
    கொம்புதவும் மட்க லந்தான்
ஓடாக வுடையினொன்றுக் குதவும்வீழ்
    மரங்கல்லு முபயோ கந்தான்
வீடான திடியின்மேற் பொருளுதவுங்
    காடழியின் விறகா மாயக்
கூடாகுந் தேகமிது வீழினெதற்
    குதவும்நீ கூறாய் நெஞ்சே.
  மாடு ஆடு முதலிய விலங்கினங்கள் இறந்தால் தசையும் மயிரும் தோலும் கொம்பும் மக்களுக்குப் பயன்படும். மண் ஏனம் உடைந்தால் ஓடாகப் பிரிதொன்றுக்குப் பயன்பெறும். கீழே விழுந்த மரம் கல் முதலியவும் பயனாகும். வீடு இடிந்தாலும் மேலே உள்ளது பலவகையாகப் பயன்பெறும். காடு அழிந்தால் விறகாகும். நிலையிலா இம் மாய உடல் உயிர் நீங்கியபின் எதற்குப் பயனாகும் நீ சொல்லுவாயாக.
 

4

  மரஞ்செடிக்குச் சொல்காலம் மக்களுடற் கின்றாம்
426
காடுசேர் மரஞ்செடிபார்த் தித்தனைநாள்
    நிற்குமெனக் கணிக்க லாஞ்சீர்
நாடுநீர்த் தடநோக்கி யித்தனைநாட்
    புனலென்ன நவில லாமோர்
வீடுதா னித்தனைநா ணிற்குமென
    விளம்பலா மெய்யென் னும்பொய்க்
கூடுதா னித்தனைநாள் நிற்குமெனப்
    புவியிலெவர் கூறற் பாலார்.