பக்கம் எண் :

203

  யாக்கை நிலையாமை
 
  (நெஞ்சே!) பழம் முதிர்ந்த பின்பே விழும். இலை முற்றிப் பழுத்த பிறகே உதிரும். எண்ணெய் முழுவதும் எரிந்த பின்னரே விளக்கு அணையும். இவ்வாறு கூற ஓர் உறுதி உண்டு. மக்கள் உடம்பு தோன்றிய கருவிலோ, பிறக்கும் பொழுதோ, கட்டிளமைப் பருவத்தோ, முதிர்ந்த பின்னரோ இறக்கும் என உறுதியில்லை. ஆதலின் இவ்வுடலின் பெருமையை என் சொல்வது?
  தழை-இலை. திடம்-உறுதி. காயம்-உடம்பு. வீழ்வது-இறப்பது.
 

7

  இறப்பகற்ற அறியார்செய் வியப்பால் என்பயன்
429
புகைவண்டி யூர்ந்துலகை நொடிக்குள்ளே
   சுற்றுவோம் புகைக்கூண் டேறிக்
ககனமிசைப் பறவையெனப் பறப்போமோர்
   புகைக்கலத்தாற் கடல்க டப்போம்
வகையாய்மின் னஞ்சலினா லெத்திசையுள்
   ளாரோடும் வார்த்தை சொல்வோம்
மிகையான புதுமைசெய்வோம் மரணமதை
   விலக்கறியோம் வியப்பீ தன்றோ.
  (மனமே!) புகைவண்டியில் ஏறி இமை மூடித்திறக்கும் காலத்தினுள் பரந்த பெரிய உலகைச் சுற்றி வருவோம். புகைக் கூண்டில் ஏறிப் பறவையைப் போல் வானத்தில் பறப்போம். புகைக் கப்பலால் பெருங் கடலையுங் கடப்போம். வகை வகையாகிய மின் அஞ்சலினால் பத்துப் புலத்துள்ளாரோடும் பேசுவோம். மேலும், அளவில்லாத வியத்தகு செயல்களைச் செய்வோம். ஆனால், உடலுக்கு வரும் சாவை நீக்கமட்டும் அறியோம். இஃது ஒரு மருட்சியல்லவா?
  நொடி-கண்ணிமைப் பொழுது. ககனம்-வானம். மின்னஞ்சல்-தந்தி. திசை-புலம். வியப்பு-மருட்சி; ஆச்சரியம்.
 

8

  ஆக்கை மாளுநாட் கடையாள மறியோம்
430
அண்டாண்டங் களின்றூர நிலையளவு
   கூறுவோ மருக்கன் திங்கட்கு
உண்டாகுங் கிராணமதை முன்சொலுவோங்
   கடிகாரத் துதவி கொண்டு