| யாக்கை நிலையாமை |
| இறப்போர்க் கண்டும் மெய் எண்ணாய் நெஞ்சே |
432 | விரியாழி நுண்மணலைத் தாரகையை யெண்ணிடினும் வீந்தோர் தம்மைச் சரியாவெண் ணிடத்தகுமோ* இன்னமுநங் கண்முன்னஞ் சாவோர் தம்மைத் தெரியாது போல்தினமும் வீண்காலங் கழிக்கின்றாய் திடமா யென்று மரியாமை யுற்றனையோ அறியாமை பெற்றனையோ வழுத்தாய் நெஞ்சே. |
|
| மனமே! கடற்கரையில் காணும் நுண்ணிய மணலையும் விண்மீனையும் கண்ணாற்கண்டு அளவிட்டாலும், இறந்தோர்களைச் செவ்வையாக எண்ணிக் கணக்கிட முடியுமோ? மேலும் நம் நேரிலே வன்மையுடனிருந்தார் மாண்டொழிவதைப் பார்த்தும் தெரியாதது போல் நாளும் வீண்காலம் போக்குகின்றாய். எந்நாளும் உறுதியுடன் மாளாதிருக்கும் நிலை பெற்றனையோ? அல்லது ஆராய்ச்சி யறிவு அற்றனையோ? கூறுவாயாக. |
| விழி-கண். ஆழி-கடல். வீதல்-சாதல். வீண்-பயனின்மை. திடம்-உறுதி. மரியாமை-சாவாமை. வழுத்தல்-கூறுதல். |
| 11 |
| நீளச் சுமக்குமுடல் நீர்க்குமிழிபோற் கெடும் |
433 | அனமிகிலோ வாயுகுறை யிற்சூடுண் ணாவிடிலின் ஆவி நீங்குங் கனமான வெய்யின்மழை பனியுதவா தவையின்றேற் கணநில் லாது தினமுமா யிரங்கண்ட மிமைப்போதா சிலுமதன்மேற் சிந்தை யின்றேற் புனன்மொக்கு ளெனவழியு நெஞ்சமே நாஞ்சுமக்கும் பூட்சி தானே. |
|
| மனமே! சோறு கூடினால் காற்று நோய் உண்டாம். குறைந்தால் சூடு. உண்ணாவிட்டால் இனிய உயிர் அகலும். மிகுதி |
| *துறந்தார். திருக்குறள் 22 |