| நீதி நூல் |
| யான வெயில் மழை பனி உதவா. அவை இல்லாவிட்டால் நொடிப் பொழுதும் உடல் நிலைக்காது. நாள்தோறும் அளவிடப்படாத இக்கட்டு. கண்ணிமைப் பொழுதேனும் உடல்மேல் நினைப்பின்றேல் நீர்க்குமிழிபோல் கெடும். இத்தகைய உடம்பையே நாம் சுமந்து திரிகின்றோம். |
| அனம்-சோறு. வாயு-காற்று. ஆவி-உயிர். கணம்-நொடி. கண்டம்-ஆபத்து; இக்கட்டு. பூட்சி-உடல். |
| 12 |
| உறுதியற்ற வாழ்நாட்கு உள்ளமே செய்வதென்? |
434 | பொன்றுநா ளின்னதென நிலையுண்டே வாழிசூழ் புவியோ ராயுள் ஒன்றிரண்டு நாளெனினும் போதுநூ றாண்டென்றோர் உரையுண் டேனும் இன்றோஇக் கணமோபின் னுறுங்கணமோ மாலையோ இரவோ சாவது என்றோவென் றோருறுதி யில்லாத ஆயுளிதற் கென்செய் வோமே. |
|
| (மனமே!) இறக்கும்நாள் இன்னநாள் என்று ஓர் உறுதி யிருக்குமானால் கடல் சூழ்ந்த உலகினருக்கு அகவை ஒன்றிரண்டு நாளாக இருப்பினும் அமையும். அகவை நூறாண்டு உண்டு என்ற ஓர் உறுதியற்ற சொல் உண்டு; என்றாலும், இன்றோ, இப்பொழுதோ, பிற்பொழுதோ, மாலையோ, இரவோ சாதல் என்றோர் திடனில்லை. இத்தகைய அகவையை உடைய நாம் செய்யக் கடவது யாது? |
| பொன்று நாள்-சாவும்நாள். ஆயுள்-அகவை. |
| 13 |
| ஆடு மாடு நெல்லால் ஆமுடற்கு அப்பெயர் |
435 | தொல்லுலகிற் புல்லிலையுண் ணாடுமுத லுயிர்களைநற் சுரபிப் பாலை நெல்லுடன்பல் தானியத்தைக் காய்கனியைக் கிழங்கிலையை நிதமு முண்டு மல்லுறவே வளருமிந்தக் காயத்தை மரமென்றும் மாடா டென்றும் புல்லென்றும் நெல்லென்றுஞ் செடியென்றுங் கொடியென்றும் புகல லாமே. |
|