| யாக்கை நிலையாமை |
| (மனமே!) பழைமையான இவ்வுலகில் புல் இலை தழை முதலியவற்றை யுண்டு வாழும் ஆடு மாடு முதலிய தாழ்வான உயிர்களைக் கொன்று அதன் உடம்பையும், தூய ஆன்பாலையும், நெல்முதலாகச் சொல்லப்படும் பல்வேறு கூல நல்லுணவையும், காய் கனி கிழங்கு கீரை முதலிய சிறந்த உணவையும் நாளும் உண்டு செழிப்புற வளரும் மக்களுடம்பை, மரம் ஆடு மாடு புல் நெல் செடி கொடி என்று சொல்லலாமன்றோ? |
| தொல்-பழைய. சுரபி-பசு; ஆன். தானியம்-கூலம். மல்லல்-செழிப்பு. புகலல்-சொல்லல். |
| 14 |
| உணவின் வழியே உருக்கொண்ட துடம்பு |
436 | ஆதியிற்புல் லிலைகனிகாய்த் தானியமாய் மீன்பறவை ஆடுமாடாய் மேதினியி லிருந்துதாய் தந்தையுடற் சேர்ந்தொருநாள் வெளியே வந்தங்கு ஓதியபண் டங்கள்தின்று பெருத்திறந்து பலசெந்துக் குணவாய்ப் பஞ்ச பூதியமாய் நாசமாய்ப் போம்நெஞ்சே நாஞ்சுமக்கும் பூட்சி தானே. |
|
| உள்ளமே! நாம் தந்தை உண்ணும் உணவின் வழிக் கலந்து தாய் கருவிற் சென்று புகுந்து வெளி வருகின்றோம். அதனால், புல் இலை கனி காய் கூலம் மீன் பறவை ஆடு மாடு முதலியவையாய் முதற்கண் இருந்தோம். பின் பண்டங்கள் தின்று பெருத்தோம். முடிவில் இறந்தோம். பல சிற்றுயிர்க்கு உணவானோம். எஞ்சியவை ஐம்பூதங்களுடன் கலந்து அழிந்தன. இத்தகைய அழிவுபாட்டு உடம்பையே நாம் சுமக்கின்றோம். |
| செந்து-சிற்றுயிர். பஞ்சபூதியம்-நிலம் நீர் நெருப்பு காற்று விசும்பு ஆகிய ஐம்பூதங்களால் ஆக்கப்பட்டது. நாசம்-அழிவு. பூட்சி-உடல். |
| 15 |
| உடல் பிணமாயின் நெருங்கார் ஒருவரும் |
437 | எமதெனுமெய் பிறக்குமுன்னெங் கிருந்ததின்னஞ் சிலகாலத் தெங்கே செல்லும் அமருயிர்நீங் கியபின்னோர் கணமுமனை சேயரிதன் அருகே நில்லார் |
|