| நீதி நூல் |
| தமர்சவமென் றெடுத்தெறிவார் பறவைவிலங் கினங்கூடித் தத்திக் கொத்தி அமர்செய்து புசிக்குமப்போ தென்னென்று கேட்பவரார் அறிவில் நெஞ்சே. |
|
| வேண்டுவன அறியா நெஞ்சே! எமது என்ற செருக்குடன் உரைக்கும் இவ்வுடல் இதற்குமுன் எங்கே இருந்தது? இன்னும் சின்னாளில் எங்கே செல்லும்? இதனகத்துத் தங்கியிருக்கும் உயிர் அகன்றபின் மனைவியும் மக்களும் ஒரு நொடிப்பொழுதும் இதனருகே நில்லார். நம்மைச் சார்ந்தோர் பிணம் என்று சொல்லிப் புறங்காட்டில் எடுத்தெறிவார். காக்கை கழுகு நாய் நரி முதலிய இனங்கள்கூடி உடல்மேல் ஏறிக் குத்திக் கிழித்துச் சண்டையிட்டுத் தின்னும். அப்பொழுது அவற்றைத் தடுத்து ஏன் என்று விலக்குவார் யாருமிலர். |
| அமரும்-தங்கியிருக்கும். கணம்-நொடி. சேயர்-மக்கள். தத்தி-ஏறி. அமர்-சண்டை |
| 14 |
| அதி. 41--துன்பம் |
| கொடுந்துயர்க் கஞ்சல்மீன் குளிர்க்கஞ் சுதலாம் |
438 | பாரில் யார்க்கும் பழங்கண் சகசமாம்* வீரி யங்கெட வெந்துயர்க் கஞ்சுதல் போரி னேர்ந்தவன் பொன்றலுக் கஞ்சலும் நீரின் மீன்குளிர்க் கஞ்சலும் நேருமே. |
|
| உலகில் எவருக்கும் துன்பமுண்டாதல் இயல்பு. ஆதலின் ஆண்மை அழியக் கொடுந்துன்பத்துக்கு அஞ்சுதல் சண்டைக்குச் சென்றவன் மாள அஞ்சுவதும், நீரில் வாழவேண்டிய மீன்கள் குளிருக்கு அஞ்சுவதும் போலும். |
| பழங்கண்-துன்பம். சகசம்-இயல்பு. வீரியம்-ஆண்மை. பொன்றல்-மாளுதல். நேரும்-போலும். |
| 1 |
| *இலக்க. திருக்குறள், 627 |