பக்கம் எண் :

209

 துன்பம்
 
 

இறக்கும் வரை உள்ள துன்பம் எண்ணி மகவு அழும்

439
பிறந்த சேயுட னேயழும் பீழைதான்
   சிறந்த மாநிலஞ் சேர்ந்துபின் னாருயிர்
இறந்து போமள வுந்துய ரென்பதை
   அறிந்து நீர்விட் டனுங்கலை யொக்குமே.
  தாய் வயிற்றினின்று தோன்றியவுடனே பிள்ளை வீறிட்டு அழும் துன்பம், உயிர் உயர்ந்த பெரிய உலகில் சேர்ந்ததுமுதல் இறந்து போம் அளவும் இடையறாத துன்பமென்பதை அறிந்து, கண்ணீர்விட்டு வருந்துவது போலும்.
 சேய்-பிள்ளை. பீழை-துன்பம். அனுங்கல்-துன்பம்.
 

 2

 வேறு
 நிலைத்த இன்பம் நீளுலகில் இன்று
440
கோடிபொன் னுடையவ ரெனினுங் கோமுடி
   சூடிய வேந்தரே யெனினுந் துன்பொடுங்
கூடிய வாழ்க்கைய ரன்றிக் கூறுங்கால்
   நீடிய சுகமுளோர் நிலத்தி னில்லையே.
 அளவில்லாத செல்வத்தை உடையவரானாலும், மணிமுடி சூடி மன்னர் மன்னராய்த் திகழ்ந்தவரானாலும் துன்புடன் கூடிய வாழ்க்கையராவர். ஆய்ந்து சொல்லுமிடத்து நிலைத்த இன்பமுள்ளவர் நிலவுலகத்தில் ஒருவரும் இலர்.
 கோடி-அளவில்லாமையைக் குறிப்பது. கோமுடி-மன்னர் மன்னன் சூடும் மணிமுடி. நீடிய-நிலைத்த. சுகம்-இன்பம். நிலம்-உலகம்.
 

3

 பொருளிழப்பால் கீழோர் பொறாது பொன்றுவர்
441
பாக்கிய நிலையெனும் பதக ரோர்துயர்
   தாக்கிடிற் பொறாதுயிர் தன்னைப் போக்குவர்
ஆக்கிய வாக்கமு மஞரு மொன்றென
   நோக்கிய சீலரை நோயென் செய்யுமே.
 செல்வம் நிலைத்து நிற்கும் என்னும் அறிவில்லாத கீழோர் பொருட் கேட்டால் ஒரு துன்பம் தம்மை வருத்தின், அத்துன்பம்
 

நீ.- 14