| துன்பம் |
| புன்செய்-வானம் பார்த்த விளைநிலம். படர்-துன்பம். அறம்-நன்மை. அரிது-முடியாது. |
| 6 |
| உழைப்பூணுறக்கம் கூடக் குறைய நோயுறும் |
444 | ஓங்கு காமத்தால் சோம்பினால் உணவினால் ஊங்கு தூங்க லால்துயில் இன்மையால் சினத்தினால் துவக்கு தாங்கொ ணாத்தொழில் செயன்முத லேதுவால் சடநோய் ஆங்கு றுஞ்சடம் செய்தவன் கைப்பிழை யன்றால். |
|
| மிக்க இணைவிழைச்சால், மடியினால், அளவுக்கு மிஞ்சிய உணவினால், பெருந்துயிலால், உறக்கம் இல்லாமையால், சினத்தினால், உடல் தாங்கமுடியாத அளவு உழைத்தல் முதலிய காரணங்களால் உடலுக்கு நோய் வரும். இவையன்றிப் படைத்த கடவுளின் செய்கைத் தாழ்வினால் அன்று. |
| காமம்-இணைவிழைச்சு. ஊங்கு-மிகுதி. துவக்கு-தோல். சடம்-உடல். செய்தவன்-படைத்த கடவுள். |
| 7 |
| உலக அழிவும் உய்வுக்கே வருமால் |
445 | பலருய் வான்சிலர்ப் படுத்திடும் பதியெனப் பரன்பார்ச் சலனம் தீவரை யிடிபெருங் கான்முதல் தாபம் கலவு றச்செயுங் காரணம் யாதெனிற் கணக்கில் உலக கோடிசம் பந்தத்தா லெனவுண ருளமே. | |
| நெஞ்சே! ஆளும் மன்னன் நாளும் பலர் துன்பமின்றி இன்புடன் வாழ, இடையூறாகவுள்ள சிலரைக் கொல்லுவதுபோல், ஆண்டவன் பலகோடி உலகத்தொடர்பால் நிலநடுக்கம் எரிமலை பேரிடி சூறைக்காற்று முதலிய உலகழியும் துன்பத்தையும் உண்டாக்குவான்; இதனை அறிவாயாக. |
| படுத்திடும்-கொல்லும். சலனம்-நடுக்கம். கால்-காற்று. தாபம்-துன்பம். சம்பந்தம்-தொடர்பு. |
| 8 |
| பத்தரை ஆளவே பரன்துன் பருள்வன் |
446 | பத்த ரன்பினைச் சோதனை பண்ணவும் பார்மேல் வைத்த வாஞ்சையை மாற்றவும் பேரின்ப வாழ்விற் சித்த மெய்தவும் அன்னரைத் துயர்செயுந் தெய்வம் அத்தன் சேயரை யடித்தறி வுறுத்தல்போ லம்மா. |
|