| நீதி நூல் |
| பெற்றோர் பிள்ளைகளை ஒறுத்து அறிவுறுத்தல்போல் கடவுளும் மெய்யடியார்களுக்குத் துன்பத்தை யருளுதல், அவர்கள் தன்பாற் கொண்டுள்ள பற்றை உலகுக்கு உணர்த்தவும், மண்மேல் வைத்த அவாவினை அறுக்கவும், பேரின்பப் பெருவாழ்வில் உள்ளம் உறையவும் என்க. |
| பத்தர்-பேரன்பர்; மெய்யடியார். சோதனை-ஆய்வு. வாஞ்சை-அவா. துயர்-இடையறாத் துன்பம். அத்தன்-தந்தை. |
| 9 |
| வழியாம் உலகுறு மின்பத் துன்பம் மனங்கொளார் |
447 | அயலா ரொண்பதிக் கேகுவார் வழித்துயர்க் கஞ்சார் வயவை தன்னிற்காண் பொருளையும் வாஞ்சியார் வசுதை உயர்பெ ருங்கதிக் கேகுமா றென்னலால் உலகின் துயரை யின்பினை மதித்திடார் துகளறு நீரார். |
|
| வேறோர் சிறந்த திருநகருக்கு வழிச்செல்வோர் வழியில் ஏற்படும் துன்பங்களுக்கு நடுங்கார். வழியிற் காணும் வியத்தகு பொருள்களையும் விழையார். (கருதிய நகருக்கே கடிது நடந்து செல்வர்). அதுபோன்று இவ்வுலகை `வானோர்க் குயர்ந்த உலகம் புகுழுவதற்கு வழியென்று கூறுதலால் உலகில் நேரும் துன்பையும் இன்பையும் குற்றமற்ற நற்றவமுடையோர் பொருளாகவெண்ணார். (மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்து மன்னி வாழ்வர்.) |
| வயவை-வழி. வாஞ்சியார்-விரும்பார். வசுதை-உலகம். துகள்-குற்றம். |
| 10 |
| தந்தவன் கொண்டானென்று தாளிணை தொழுவர் நல்லோர் |
448 | மனைவி சேய்தமர் தம்முன மாளினு மகியிற் புனையுஞ் சீரெலாம் ஒழியினுந் துன்பமென் புகினும் அனைய சீரெலா மளித்தவன் கொண்டன னென்ன வினைய மோடினி யவனடி பரசுவர் மேலோர். |
|
| அன்புறு மனைவியும் இன்புறு மக்களும் தமக்குமுன் இறப்பினும், உலகிற் சிறப்புற அழகுசெய்த செல்வ முதலியன நீங்கினும், வறுமையால் துன்புற்று வாடி எலும்பு சிந்தினும், அவையெலாம் அருளுடன் அளித்த முழுமுதல் கொண்டனன் என்று பணிவுடன் எண்ணி நன்னெறிச் செல்லும் நல்லோர், அவன் திருவடியை அன்புடன் தொழுவர். |
| மகி-உலகம். உகினும்-சிந்தினும். வினையம்-பணிவு. பரசுவர்-தொழுவர். |
| 11 |