பக்கம் எண் :

214

  நீதி நூல்
 
  அற்பம்-சிறிது. மகி-உலகம். விழல்-பயனில்லாதது. ஒல்லார்-பகைவர். நீதி-முறைமை. அனையான்-ஒத்தான்.
 

 13

  துன்பிடைத் தூய்மை சுடர்விடும் பொன்போல்
451
அறமென் பதற்கும் அறிவுக்கும் மூலம்
    அஞராகும் உலகின் பமே
மறமென் பதற்கும் மடமைக்கும் வித்து
    மகவிச்சை யாறொழுகல் கண்டு
இறையும் தகப்பன் முனியாமை சீற்ற
    ஏற்றத்தின் நீர்மை எனல்போல்
உறுபுன்க ணின்றி ஒருவன் சுகங்கள்
    உறலீசன் முனிவா குமால்.
  துன்பமே நன்மை செய்தற்கும் அறிவு வளர்தற்கும் காரணமாகும். உலக இன்பமே பாவம் செய்தற்கும் அறியாமை மூடற்கும் காரணமாகும். பிள்ளை தன் மனம்போல் நடக்கக் கண்டும், பெற்றவன் சிறிதும் சினம் கொள்ளாதிருப்பின், அதுவே மிக்க சினத்தின் அடையாளமாம். அதுபோல் ஒருவன் உலகத்தில் துன்பின்றி இன்பங்கள் அடைந்தால் அதுவே ஆண்டவன் முதிர்ந்த சினத்தின் அடையாளமாகும்.
  மூலம்-காரணம். அஞர்-துன்பம். மறம்-பாவம். வித்து-காரணம். முனிவு-முதிர்சினம். புன்கண்-துன்பம்.
 

14

 

அதி. 42--அறஞ்செயல்

 

 சாங்காலத் தறம் செய்தல் யார்க்குமே சாலாது

452
பசிமிகுந்த பின்நெல்லை விதைப்பதுபோல்
    வீட்டில்தீ பற்றிக் கொண்டு
நசியும்போ ததையவிக்க வாறுவெட்டல்
    போலும்போர் நடக்குங் காலை
விசிகநூல் கற்கமுயல் வதுபோலுங்
    கபமிஞ்சி விக்கிச் சிக்கி
இசிவுகொண்டு சாங்காலத் தெப்படிநீ
    யறம்புரிவா யிதயப் பேயே.