| அறஞ்செயல் |
| நெஞ்சே! இறுதிக்காலத்துக் கோழை மிகுதிப்பட்டு, தொண்டை அடைத்துக் கை கால் இழுத்து அறிவிழந்து அல்லல் படுவாய். அப்பொழுது எப்படிச் செயற்பாலதாம் அறத்தினைச் செய்வாய். அப்பொழுது செய்யலாமென்று கருதுவது, ஒருவன் பசி மிகுந்தபின் உண்ண நெல் விதைப்பதும், வீடு தீப்பற்றிக்கொண்டு அழியும்போது தீயை அணைக்க யாறு வெட்டுவதும், போர் நடக்கும்போது படைநூல் கற்பதும் போன்று முடியாததாகும். |
| நசிதல்-அழிதல். விசிகநூல்-படை நூல். கபம்-கோழை. இதயம்-நெஞ்சம். |
| 1 |
| முற்பழக்கம் இன்றேல் முடியாது எதுவும் |
453 | எத்தொழிலு முற்பழக்க மின்றியெய்தா தறமென்னு மிணையொன் றில்லா அத்தொழின்முற் பழக்கமின்றிச் சாங்காலத் தமையுமோ வருமன் றற்கு வத்திரம்வேண் டிற்பருத்தி விதைத்துமுன்ன நெய்யாமன் மணஞ்செய் காலத்து ஒத்ததுகில் வேண்டுமென எத்தனைபேர் முயன்றாலும் உறுமோ நெஞ்சே. |
|
| மனமே! எந்தச் செயலும் முதலில் பழகிக் கைவராமல் செய்யமுடியாது. தனக்குப் பிறிதொன்றும் ஒப்பிலாத நல்வினையாகிய கடமை பழக்கமின்றிச் சாங்காலத்து எப்படி அமையும். மணத்திற்கு வேண்டிய கூறையாகிய ஆடையினை முன்னமே பருத்தி விதைத்துப் பஞ்செடுத்து நூலாக்கிப் பாவோட்டி நெய்து அமைத்துக்கொள்ளல்வேண்டும். அப்படிச் செய்யாமல் மணத்தின்போது பருத்தி விதைத்து ஆடையாக்க வேண்டிப் பலர் முயன்றாலும் முடியுமா? முடியாதன்றே! |
| இணை-ஒப்பு. மன்றல்-மணம். வத்திரம்-ஆடை. |
| 2 |
| படித்துப் பழகியபின் கைக்கொளல் எளிதாம் |
454 | சிற்பநூ லிலக்கணநூல் வைத்தியநூல் மரக்கலநூல் செருநூ லின்னம் பற்பலநூ லுணர்வதினும் புண்ணியநூ லரிதாமோ பகரந் நூல்கள் |
|