பக்கம் எண் :

217

  அறஞ்செயல்
 
 

       எல்லையறியா வாழ்நாளதனால் இயற்றுக விரைந்தறம்

456
இன்றருணோ தயங்கண்டோ முயர்ககன
   முகட்டின்மிசை யிந்தப் பானு
சென்றடைய நாங்காண்ப தையமதைக்
   காண்கினுமேற் றிசையி ருக்கும்
குன்றடையு மளவுநா முயிர்வாழ்வ
   தரிததன்முன் குறுகுங் கூற்றம்
என்றச்சத் துடன்மனமே மறவாம
   லறவழியி னேகு வாயே.
  நெஞ்சே! இன்று ஞாயிற்றின் தோற்றங் கண்டோம். காலை கழிந்து கதிரவன் உச்சிக்கு வருவதை நாம் காண்பது உறுதியில்லை. உச்சிப்பொழுது கண்டாலும், அவன் சென்றடையும் மாலைப்பொழுதைக் காண்பதும் உறுதியில்லை. மாலைப்பொழுதைக் கண்டாலும் அவன் குன்றடையும் அந்நிலை காணல் முடியாது. அதற்குள்ளே கூற்றுவனும் நெருங்குவான். ஆதலால், மிக்க அச்சத்துடன் மறவாமல் புண்ணிய வழியிலே நடப்பாயாக.
  அருணோதயம்-செங்கதிர்த் தோற்றம். ககனம்-வானம். முகடு-உச்சி. பானு-சூரியன். அறவழி-புண்ணியவழி. ஏகுதல்-நடத்தல்.
 

 5

  இறைநினைப் போடறம் இயற்றுதற்கு வருத்தமென்
457
சிற்றுதர போசணைக்கா மலையேறிக்
   கடல்கடந்து தேய மெல்லாஞ்
சுற்றியனு தினமலைவாய் நித்தியபே
   ரின்பசுகந் தோய வேண்டிச்
சற்றுமுடல் வருந்தலின்றி யலைதலின்றி
   யோரிடத்தே தங்கி மூளும்
பற்றினையே துறந்துசும்மா இருந்தறஞ்செய்
   வதிலென்ன பார நெஞ்சே.
  மனமே! அழிந்துபோம் சிறிய சாண்வயிற்றைப் பேணுவதற்காக மலை கடந்தும் கடல் கடந்தும் நாடு சுற்றியும் நாளும் வருந்தித் திரிவாய். என்றும் அழியாத கடவுளின்பத்தைக் கைக்கொள்ளுவதற்காக உடல் ஓடியாடி எய்தும் வருத்தம்