| நீதி நூல் |
| ஒரு சிறிதுமின்றி ஓரிடத்தே ஒருமனப்பட்டு மேலும் பெருகும் பற்றினை விட்டுக் கடவுள் நினைவின்றி மற்றொன்றும் எண்ணாது புண்ணியம் செய்து வாளா இருப்பதற்கு உண்டாம் வருத்தம் யாது? |
| உதரம்-வயிறு. போசணை-பேணுதல். நித்தியம்-என்றும். மூளும்-பெருகும். அறம்-புண்ணியம். |
| 6 |
| தோற்றத்தே தீமையைத் தொலைத்தல் செம்மை |
458 | கலமூறுஞ் சிறுநீரை விரைவினிறை யாவிடினக் கலந்தான் மிக்க சலமூறி யழுந்துமது போற்பவத்தை விரைவுற்றுத் தள்ளி டாமல் நிலமீதில் யாம்வாளா இருப்போமேற் பாவங்கள் நிறைந்து மோக்க நலநீங்கி நரகமெனும் பேராழி யிடைவீழ்ந்து நலிவோம் நெஞ்சே. |
|
| ஆழ்கடலிற் செல்லும் கப்பலில் சிறிதுநீர் அடி இடைவெளிவழி ஊறும். ஆயின், அதனை அப்பொழுதே இறைத்துக் கொட்டவேண்டும். இல்லாவிட்டால் தண்ணீர் மிகுதியாகப் பெருகி அக்கப்பல் அமிழ்ந்துவிடும். அதுபோல், மனமே! நம்மிடத்து ஏற்படும் தீவினைகளை உடனுக்குடன் மிகு விரைவில் அகற்றிவிடா திருப்போமானால், அவை பெருகி வீடுபேற்றில் செல்லவொட்டாது விலக்கி இருளுலகில் கொண்டுபோய்த் தள்ளும். அப்பொழுது மிக்க துன்பம் அடைவோம். |
| கலம்-கப்பல். பவம்-பாவம்; தீமை. மோக்கம்-வீடுபேறு. நரகம்-இருளுலகம். நலிவு-துன்பம். ஊறும்-கசியும். |
| 7 |
| உடனொழிக் காவிடிற் பாவம் ஒழியாது |
459 | பெருவெள்ளஞ் சேர்ந்தபின்ன ரதைத்திருப்ப வொண்ணுமோ பெருத்து நீண்ட தருவின்கோ ணலைநிமிர்க்கத் தகுமோபா வங்களைநீ தள்ளி மேலாங் கருமமதின் முயலென்றாற் பின்னையா கட்டுமென்றாய் கசடு விஞ்சி ஒருமலைபோ லானபின்னெவ் வாறதைநீ சாம்பருவத் தொழிப்பாய் நெஞ்சே. |
|