பக்கம் எண் :

219

  அறஞ்செயல்
 
  மனமே! வெள்ளம் பெருகிவிட்டால் வேண்டியபடி கால்வாய்களில் திருப்ப முடியாது. மூங்கில் முதலிய பெரிய மரங்களை முதிர்ந்தபின் வளைக்க முடியாது. அவைபோலப் பாவத்தைத் தொடக்கத்தே நீக்கிப் புண்ணியத்தை விடாது செய்க. அல்லையாயின் சாங்காலத்து எப்படி நல்வினை செய்தல் கூடும்? தீமையை ஒழித்தல் முடியும்?
  தரு-மரம். கசடு-தீமை. விஞ்சி-பெருகி.
 

8

  தீ நினைப்பால் தீ நோக்கால் பெரும்பாவம் சேரும்
460
ஏதிலார் பொருணோக்கி யிச்சையுறல்
   கவர்ந்ததொப்பா மெழின்மின் னாரைக்
காதலாய் நோக்குதலே கலந்ததொப்பாம்
   பிறர்கேட்டைக் கருத லன்னார்
வேதையுறக் கொன்றதொப்பா மிவ்வாறோர்
   பயனின்றி மேவும் பாவம்
ஆதலினைம் பொறிவழியே மனஞ்செலா
   தடக்குவா ரறிவு ளோரே.
  பிறர் பொருளைக் கண்டு ஆசைப்படுதல், அப் பொருளைக் கொள்ளையிட்டதோடு ஒக்கும். வளரும் அழகுமிக்க மின்போலும் இடையினையுடைய அயல்பெண்களைத் தீய கருத்துடன் பார்த்தல், அம் மாதரைச் சேர்ந்தது ஒக்கும். பிறர் கெடவேண்டுமென்று எண்ணுதல், அவர்களை மிகத் துன்புறுத்திக் கொன்றதை ஒக்கும். இவ்வகையாக எண்ணத்தாலும் பார்த்தலாலும் பயனடையாமலே வந்து பொருந்தும் பாவம் பாலவாம். ஆதலின், அறிவுடையோர் தம்மனத்தைப் பொறி வழிச்செல்லவொட்டாது தடுத்துத் தம் வழிச்செலுத்தி அடக்குவர்.      
  இச்சை-ஆசை. கவர்தல்-கொள்ளையிடல். வேதை-துன்பம்.
 

9

  உயிர்க்கறஞ் செய்யாமல் உடலோம்பல் வீணாம்
461
பரியூர்வோன் தனைமறந்து பரிக்குபசா
   ரங்கள்மிகப் பண்ணல் போலும்
பெரியகட வுளைப்பணியா தாலயத்தை
   யலங்கரிக்கும் பித்தர் போலும்