பக்கம் எண் :

221

  அறஞ்செயல்
 
 ஆண்டவன் அன்போ டுயிர்காத்தல் பேரறம்
463
முந்தைஇறைக் கன்புபின்பு தன்னுயிர்போல்
   மன்னுரை முறையி னோம்பல்
இந்தஇரு விதிகளினுள் வேதமெலா
   மடங்குமனம் இன்ப மேவ
வந்தஇக பரமளிக்கும் அறமொன்றே
   அருந்திருவாம் அதன்முன் ஆயின்
சிந்தனைசிந் தனையுறச்செய் புவித்திருஏட்
   டிடைவரைந்த திருவொப் பாமால்.
  முழு முதற் கடவுளுக்கு அன்பும், தன் உயிர்போல் நிலைபெற்ற எல்லா உயிர்களையும் ஊண் உடை உணர்வு உறையுள் உறை முதலியவற்றால் பேணுதலும் ஆகிய இரண்டறங்களும் முறையே வீட்டின்பமும் உலக இன்பமும் தருவன. இவ்வறத்தின் கண்ணே மறைகளெலாம் அடங்கும். இஃதொன்றே அழியாப் பெருஞ்செல்வ வாழ்வாம். இதற்குமுன் அழியும் தன்மை வாய்ந்த உலகியற் செல்வத்தைப்பற்றி ஆராயின் அஃது ஏட்டில் எழுதிய செல்வம்போல் பயனின்றாம். உலகச் செல்வம் உள்ளத்தில் கவலை தரும்.
  உறை-மருந்து. சிந்தனை-உள்ளம். சிந்தனை-கவலை.
 

12

  வேறு
  நஞ்சனைய பாவம் நவின்றியற்றல் வருத்தம்
464
உளதிலை யென்ன வுரைப்பதே வருத்த
   முண்மை கூறிட லெளிதாகுங்
களவுகட் காமங் கொலைசெயல் வருத்தங்
   காவலன் தண்டமூர்ப் பகையாம்
உளமதை வருத்தும் இகபரங் கெடுக்கும்
   உண்மையா விவையெலாம் உன்னில்
களநிகர் பாவஞ் செய்தலே கட்டங்
   கருதறஞ் செயலெளி தன்றோ.
  உண்மையை மறைத்து இல்லை என்று பொய் சொல்லுவதே வருத்தம். உண்மை சொல்லுதல் எளிது. களவு, கள், காமம்,