பக்கம் எண் :

223

  அறஞ்செயல்
 
 
அலகறு கால நரகவெந் தழலாழ்ந்
   தயர்வுற வொண்ணுமோ அவியாப்
புலவையே விளைக்கும் பவத்தைவே ரறுத்துப்
   புண்ணியம் புரிந்திடாய் மனனே.
  நெஞ்சே! மெல்லிய மாதர்கள் பலர் அடி தடவவும், ஆடிப் பாடவும், பகற்பொழுதெல்லாம் அனிச்சப்பூ விரித்த படுக்கையில் கிடக்கவும் இவ் உடலம், வெந்நீர் ஊற்றினும் பெருந்துன்பமாம். அஃது அளவிலாத காலம் பாவத்துக்கீடாகக் கொடிய இருளுலகில் கிடந்து தளர்வது பொருந்துமா? நீங்கா இருளுலகையே தரும் பாவத்தை விலக்கிப் பேரின்பம் தரும் அறத்தையே விரும்பி `ஒல்லும்வகை ஒவாதேழு `செல்லும் வாயெல்லாம் செய்க.ழு
  கழல்-அடி. அலகறு-அளவில்லாத. நரகு-இருளுலகு. அயர்வு-தளர்வு.
 

15

  வேறு
  துன்புக் கஞ்சில் துணையறம் கிட்டா
467
சூற்றுயர்க் கஞ்சு வாட்குச் சுதரிலைப் பயனொன் றில்லைக்
காற்றினுக் கஞ்சா நின்ற கலத்தினுக் கவிழ்தங் கைப்பென்று
ஏற்றிட வஞ்சி னாரோக் கியமிலை யின்னற் கஞ்சிற்
சாற்றரு மறமு மில்லைத் தனிப்பர கதியு மின்றே.
  கருக்கொண்டு எய்தும் துன்பத்திற்கு அஞ்சுபவட்கு மக்கட்பேறு இல்லை. காற்றுக்கு அஞ்சும் கப்பலால் பயன் ஒன்றுமில்லை. கசப்பான மருந்துண்ண அஞ்சுவார்க்கு உடல் நலம் இல்லை. முயற்சித் துன்பத்திற்கு அஞ்சுவாருக்கு, சொல்லுதற்கரிய பெரு நன்மையும் கடவுளின்பமும் இல்லை.
  சூல்-கரு. சுதர்-மக்கள். கலம்-கப்பல். அவிழ்தம்-மருந்து. பரகதி-கடவுளின்பம்.
 

16

  நயந்தறஞ் செய்யார் நாய்த்தொழில் செய்வார்
468
இந்துமீன் பருகி பக்கி யினவிலங் குகள்ம ரங்கள்
ஐந்துபூ தங்க ளேனை யாவுமோ வாதெஞ் ஞான்றுந்
தந்தொழில் செய்து வாழுந் தனியறம் புரித லென்னும்
நந்தொழில் புரிகி லேம்யாம் நாய்த்தொழி லுடைய நெஞ்சே.