பக்கம் எண் :

224

  நீதி நூல்
 
  மனமே! திங்கள், விண்மீன், ஞாயிறு, பறவைக்கூட்டம், விலங்குக்கூட்டம், மரங்கள், ஐம்பெரும்பூதங்கள் எல்லாம் எப்பொழுதும் இடைவிடாது தத்தமக்குரிய தொழிலைச் செய்து வருகின்றன. அதுபோல், நாமும் நம் தொழிலாகிய ஒப்பிலா நன்மையை விழைவுடன் செய்கின்றோமில்லை. உண்டு உடுத்து உடனுறைந்து உறங்கிக் கழியும் கீழான நாய்த் தொழிலையே நம் தாய்த்தொழிலாகச் செய்து வருகின்றோம்.
  இந்து-திங்கள். மீன்-விண்மீன்; நட்சத்திரம். பருதி-ஞாயிறு. பக்கி-பறவை.
 

17

  அறமே நல்லோர்க்கு அழியா வாழ்வு
469
இன்னமு தத்தின் முன்வே
   றினிமையும் உளதோ பானு
முன்னமோர் சுடரு முண்டோ
   மோக்கத்திற் சுகம்வே றுண்டோ
துன்னற மேநல் லோர்க்குத்
   துகளறு செல்வ மாகும்
அன்னதை யன்றி வேறோர்
   ஆக்கமும் வேண்டுங் கொல்லோ.
  இன்சுவைத்தாகிய வெண்ணெய் போன்ற அமிழ்தத்தின் முன் வேறு இனிமையுள்ள பொருள் எவையுமுளவோ? ஞாயிற்றின் முன் அதனின் மிக்க ஒளியுமுண்டோ? கடவுளின்பத்தினும் மிக்க இன்பமும் உண்டோ? இவைபோன்ற கல்வி கேள்வி அறிவு ஒழுக்கம் வாய்ந்த நல்லோர்க்குக் கடமையாம் நன்மையே குற்றமற்ற வாழ்வாகும். இந் நன்மையைவிடப் பெருவாழ்வு வேறும் உண்டோ?
  பானு-ஞாயிறு. சுடர்-ஒளி. மோக்கம்-கடவுளின்பம். அறம்-நன்மை. துகள்-குற்றம். ஆக்கம்-வாழ்வு.
 

18

  அறஞ்செய்வார்க்கே ஆண்டவன் இன்புண்டு
470
மன்னுள னேலுண் டாணை
  மகிழவுஞ் சிறையு முண்டாம்
முன்னுதே வுளனேற் பாவம்
  புண்ணியம் மோக்கம் அள்ளல்