பக்கம் எண் :

225

  அறஞ்செயல்
 
 
என்னும்யா வையுமுண் டொப்பில்
   ஏணுளான் கோபந் தாங்கி
மன்னுவோர் யாவர் நெஞ்சே
   மறமொழித் தறஞ்செய் வாயே.
  மனமே! உலகினை நலமுறக் காக்கும் வேந்தன் ஒருவன் உளன். ஆனால், அவன் ஆணையாகிய மக்கள் ஒழுகலாற்றின் வழி நடப்போர்க்கு இன்பந்தரும் மகிழ்ச்சிமிக்க மாளிகை உண்டாம். அவ்வொழுகலாற்றை மீறித் தீயவழி நடப்பவர்களுக்குத் துன்பந் தரும் வேலை நிறைந்த காவல்கூடம் உண்டு. அதுபோல், கருதப்படுகின்ற தெய்வம் உளது என்றால் தீமை நன்மை அவற்றின் பயன் நுகரும் துன்புலகு இன்புலகு என்று சொல்லப்படும் எல்லாம் உண்டாம். எல்லா வலிமையுமுடைய கடவுளின் சினத்துக்குரிய பாவத்தைச் செய்து அவன் சினத்தைப் பொறுத்து வாழ்வார் யார்? ஆயின், பாவத்தை யொழித்துப் புண்ணியஞ் செய்து வாழ்வாயாக.
  மன்-வேந்தன். ஆணை-சட்டம். மகிழகம்-மாளிகை. சிறை-வளமனை; காவற்கூடம். முன்னுதல்-கருதுதல். தேவு-தெய்வம். மோக்கம்-இன்பவுலகு. அள்ளல்-துன்புலகு. ஏண்-வலிமை. கோபம்-சினம். மன்னுவோர்-வாழ்வோர். மறம்-பாவம்.
 

19

  எல்லா வாழ்வும் இயைப்ப தறமே
471
அணியிலார்க் கணியாம் வாய்ந்த
   அழகிலார்க் கழகாம் நீண்ட
பிணியினார்க் கெக்க ளிப்பாம்
   பேறிலார்க் கன்ன தாமுள்
துணிவிலார்க் குணர்வெல் லாமாம்
   துப்பிலார்க் கொப்பில் துப்பாம்
தணிவில்பாக் கியங்க ளெல்லாம்
   தருமமல் லதுவே றுண்டோ.
  `அறம்ழு பூணும் நகை இல்லாதவர்களுக்கு நகையாகும். அதனால் பெறும் செயற்கை அழகும் இயற்கை அழகும் இல்லாதவர்கட்கு அழகாகும். நெடுநாள் நீங்கா நோயினர்க்கு அந்நோய் நீங்கி மிக்க மகிழ்ச்சியாகும். வேண்டும் பாக்கியமாகிய
 

நீ.-15