| நீதி நூல் |
| செல்வமில்லாதவர்க்குச் செல்வமாம். உள்ளத்து அறிவுரம் இல்லாதவர்க்கு உணர்வெல்லாமாம். துணையில்லார்க்குத் தக்க துணையாம். அழிவில்லாத கடவுளின்பப் பேறுமாம். ஆயின், அறத்தினும் சிறந்தது வேறுண்டோ? |
| எக்களிப்பு-மிகுமகிழ்ச்சி. பேறு-செல்வம். துணிவு-உரம். ஒப்பில்துப்பு-தக்க துணை. துப்பு-துணை. தணிவில்-அழிவில்லாத. பாக்கியம்-கடவுளின்பம். தருமம்-அறம். |
| 20 |
| எல்லாரும் வணங்கும் ஏற்றம் அறம் தரும் |
472 | நாம்பணி வோர்க ளெல்லாம் நமைத்தொழச் செய்யும் தேவர் ஆம்பணி நல்கும் விண்ணும் அகிலமும் வணங்கச் செய்யும் சாம்பணி யில்லா ஈசன் தாளிணை மருவச் செய்யும் தேம்பணி தரும மல்லால் செல்வம்வே றுளதோ நெஞ்சே. |
|
| மனமே! இனிய எழிலமைந்த அறமே, நாம் முன்பு தாழ்ந்து வணங்கியவர்களைக் கொண்டு நம்மை வணங்கச் செய்யும். நம்மைத் தெய்வநிலை எய்தச் செய்யும். விண்ணும் மண்ணும் பிறவற்றிலும் உள்ளவர்கள் எல்லாரும் நம்மை வணங்குவர். இறப்புப் பிறப்புத் தொழில் என்றும் இல்லாத முழுமுதலின் திருவடியைப் பொருந்தி இன்புறச் செய்யும். இவ்வறத்தினில் பெரிய வாழ்வு வேறுண்டோ? இல்லை. |
| பணிவோர்-வணங்கப்படுவோர். தொழில்-வணங்கல். சாம்பணி-இறக்குந்தொழில். தேம்பணி-இனிய எழில். தருமம்-அறம். |
| 21 |
| கடல்நீர் வற்றினும் கடவுள் நிலை அழியாது |
473 | சூழ்பல உகங்கட் கொவ்வோர் துளிதுளி யாக்க ழிந்தீங்கு ஆழ்கடல் முழுதும் வற்றி அழியினும் பழியி னார்வீழ் |
|