பக்கம் எண் :

228

  நீதி நூல்
 
 பிறவாப் பெருஞ்சாவால் பெரும்பொருள் உருத்தோன்றும்
475
அறப்பெருங் கடலன் னான்தன்
   அடிமலர் காணா வண்ணம்
மறைப்பதெய் உடற்ப டாமாம்
   மரணத்தால் அதனைப் பாரில்
துறப்பவர்க் குடனே அத்தன்
   சொரூபமே தோன்ற லாலிங்கு
இறப்பது பிறப்பி னுந்தான்
   இனிதற வர்க்கு மாதோ.
  அறவாழி அந்தணனாகிய முழுமுதல்வனின் திருவடித் தாமரையைக் காணமுடியாதபடி மறைப்பது நம்முடைய இளைத்துப் போம் இயல்பு வாய்ந்த திரைபோன்ற இவ்வுடல். இனிப் பிறந்திறவாப் பெருஞ்சாவால் அவ்வுடலை உலகத்தில் விடுபவர்க்கு, விட்ட அப்பொழுதே தந்தையே அனைய கடவுள் தன் திரு உருவினைக்காட்டி யருள்வன். அவ்வுருத் தோற்றம் கிடைப்பதால் அறவோர்க்கு இவ்வுலகில் பிறப்பதினும் இறப்பதே மிகவும் இனிமை யுடைத்து.
  எய்த்தல்-இளைத்தல். படாம்-திரை. மாமரணம்-பிறவாப் பெருஞ் சாவு.
 

24

  வேறு
  தக்கோன் அடக்கம் சால்பற மாகும்
476
விறலிகற் பதுவே கற்பு கூனுடல்
  விருத்தை கற்பரி தன்று கலையெலாம்
அறவு ணர்ந்ததக் கோர்நொறி லேநொறில்
  அஞ்ஞை கொண்ட அடக்கம் கதழ்வன்று
திறலி னார்பொறை யேபொறை யற்பமுந்
  திறலி லார்தம் பொறுமை தலையன்று
மறலு ளார்கொடை யேகொடை சீரெலாம்
  வாய்த்த செல்வர் கொடைபெரி தன்றரோ.
  கட்டிளமை வாய்ந்த பதினாறாண்டுப் பருவப்பெண் கற்பு நிறை தவிராது `ஒருவனைப்பற்றி ஓரகத்திருத்ழுதலே சிறந்த