பக்கம் எண் :

229

  கணிகையரியல்பு
 
  கற்பாம். உடற் கூனும் அழகின்மையும் முதுமையும் வாய்ந்தவள் காக்கும் கற்பு அத்துணைச் சிறந்ததன்று. மெய்ந்நூற்கல்வி முற்றவுணர்ந்த பெரியோர் புலனடக்கமே உண்மை அடக்கமாகும். அறிவிலான் அடக்கம் பெருமை தருவதாகாது. `எல்லாம் ஒறுக்கும் மதுகை உரனுடையாளன், பொறுக்கும் பொறையே பொறைழுயாம். சிறிதும் வலிமையில்லாத கோழையின் பொறுமை உயர்ந்ததன்று. வறுமையுள்ளவர் கொடுக்கும் கொடையே அன்பு அருள் வளர்க்கும் இன்பக்கொடையாம். இடம் பொருள் ஏவல் முதலிய சிறப்பு வாய்ந்த செல்வர் கொடை பெரிதாகாது.
  விறலி-பதினாறாண்டுப்பெண். விருத்தை-முதியவள். நொறில்-அடக்கம். அஞ்ஞை-அறிவிலான். கதழ்வு-பெருமை. அற்பம்-சிறிது. திறம்-வலிமை. மறல்-வறுமை.
 

25

  அதி. 43--கணிகையரியல்பு
  பொருளற்ற விடத்துப் பொய்ப்போக்குரைப்பர் பொதுமாதர்
477
பூவையிவட் களித்தநிதி கணக்கிலையோர்
   கடன்காரன் புலிபோல் நம்மைச்
சாவடிக்கே யிழுக்கமயி லேயிடர்தீ
   ரென்றிவள்தன் தாளில் வீழ்ந்தேம்
பூவில்வைத்த நிதியையோர் கிழப்பூதங்
   காத்தினிய பூபா உன்னைச்
சீவபலி யிடினீவே னென்றதென்றா
   ளென்செய்வாள் தெரிவைதானே.
  குயிலனைய இப்பொது மகளுக்கு வாரிவாரி இறைத்த பொருளுக்கு அளவில்லை. கடன்காரன் ஒருவன் புலிபோல் வந்து நம்மை நடுநிலை மன்றத்துக்கு இழுத்துத் துன்புறுத்துகின்றான். அப்பொழுது யான் `மயிலே, இக்கடனைக் கொடுத்து இக்கட்டைத் தீர்ப்பாயாகழு என்று அவள் காலில் விழுந்தேன். அவள் மிகவும் பரிவுள்ளாள்போல் நிலத்தில் புதைத்து வைத்த பெரும் பொருளைத் (தாய்க் கிழவியாகிய) ஒரு கிழப்பூதம் காத்துக்கொண்டிருக்கிறது. அஃது, `இனிமை வாய்ந்த மன்னனே! உன்னை உயிர்ப்பலி ஊட்டினால் தருவேன்ழு என்று கூறுகின்றதென்றாள்.
  பூவை-குயில். சாவடி-மன்றம். பூபா-மன்னா.
 

1