| நீதி நூல் |
| உடன்சாவேன் என்றவள் உடைகோவணம் வேண்டல் |
478 | நேரிழைநம் முடனிறப்ப னெனமுன்ன முரைசெய்தாள் நிருபன் நம்மை ஈரவெனக் கொலைக்களத்திற் கிழுக்கவடி பற்றிப்பின் னிரங்கி வந்த காரிகையை நோக்கினோம் மிஞ்சியவோர் கோவணத்தைக் கருதி வந்தேன் ஓருயிர்நம் மிருவர்க்கும் நீர்வீயின் நானிறந்த தொக்கு மென்றாள். |
|
| சிறந்த அணிகலன் அணிந்துள்ள பொதுமகள் முன் எல்லாம் நாம் இறப்பின் தானும் உடன் இறந்துவிடுவேன் என்று உறுதியாகக் கூறிவந்தாள். மன்னன் தண்டனையால் நம் உயிர்போக நேர்ந்தது. கொலைஞர் இழுத்துச் செல்கின்றனர். அவளும் மிக்க உருக்கத்துடன் நம் அடியைப்பற்றிப் பின்வந்தாள். அவளை நாம் பார்த்தேம். அவள் நம்மிடம் எஞ்சியிருக்கிற ஒரு கோவணத்தைப் பெறும்பொருட்டு வருவதாகக் கூறினாள். மேலும், நம் இருவருக்கும் உயிர் ஒன்றே; நீர் இறப்பின் நான் இறந்ததாகும் என்றாள். |
| காரிகை-அழகிய பெண். ஒக்கும்-ஆகும். |
| 2 |
| பொட்டணிந் துணர்த்தினாள் போற்றுமெய் அறிவு |
479 | மனைதாலி முதல்வேசைக் கீந்துவே றொன்றுமின்றி மயங்கும் வேளை புனையவோ ரணியிலா திருந்த இல்லாள் கழுத்தினிலோர் பொட்டைக் கண்டு மனமகிழ்வுற் றேதென்றேன் பரத்தையர்போ லெனக்குமருள் வாய்க்க வேண்டி இனமாப்பொட் டணிந்துகொண்டு தாசியா யினனென்ன வியம்பி னாளே. |
|
| மனைவியின் தாலிமுதல் எல்லா அணிகலன்களும் பொதுமகளுக்கு ஈந்துவிட்டேன். இனிக் கொடுப்பதற்கு ஏது இல்லையே என்று கலங்கினேன். அப்பொழுது மனைவியின் கழுத் |