பக்கம் எண் :

231

  கணிகையரியல்பு
 
  தில் பொன்னாலாய பொட்டொன்று கண்டேன். மகிழ்ந்தேன்; ஏதென்றேன்.அவள் `பொதுமகளுக்குக் கிடைத்ததுபோல், உமதருள் எனக்கும் கிடைக்கவேண்டும்; அதன்பொருட்டுப் பொட்டணிந்து பொதுமகள் ஆனேன்,ழு என்றாள்.
  மனை-மனைவி. தாலி-மங்கலநாண்.
 

3

  பொதுமகளுக்கு ஆண்பஞ்சம் புகல்வது வீணே
480
ஆவியனை யாளையோர் பொழுதுபிரிந்
     தவளில்ல மணுகுங் காலை
மேவுபாங் கியைக்கண்டாண் துணையின்றி
     வருந்தினளோ மின்னா ளென்றேன்
நாவிதனுக் குண்டோகாண் மயிர்ப்பஞ்ச
     மலப்பஞ்சம் நாய்க்கு முண்டோ
தேவிதனக் குண்டோஆண் பஞ்சமென்றாள்
     அதன்பொருளைத் தெரிகி லேனே.
  உயிர் ஒத்த பொதுமகளை ஒருபொழுது பிரிந்து அவள் வீடு சென்றேன். தோழியைக் கண்டேன். `உன்தலைவி, ஆண் துணை (யான்) யில்லாமல் வருந்தினாளோ?ழு என்றேன். அவள் `மயிர்வினைஞனுக்கு மயிர்ப்பஞ்சமும், நாய்க்கு மலப்பஞ்சமும் உண்டோ? அதுபோல் என் தலைவிக்கு ஆண்பஞ்சமும் உண்டோ? என்றாள். அதன் உள்ளுறைப் பொருள் ஒன்றும் விளங்கவில்லை.
  பஞ்சம்-பொருள்கிடையாமை.
 

4

  பொருளிழந்து மூதேவியைப் பொருந்தவரும் வெறுப்பு
481
செவ்வையுறு பொருள்கவர்ந்த பின்னரெனைக்
     கைவிட்ட தேனை நோக்கிக்
கொவ்வைவாய் மயிலேயிச் சினமேதென்
     றேன்வனசக் கோயின் மேவும்
அவ்வையைமுன் சேர்ந்தபிழை பொறுத்தவளை
     யென்னகத்துக் கழைத்தேன் அன்னாள்
தவ்வையையு மருவினீர் இனிப்பொறே
     னென்றூடிச் சலங்கொண் டாளே.