| | நீதி நூல் |
| | நலம் தரும் பொருளெலாம் பொதுமகள் பறித்துக்கொண்டு என்னைக் கைவிட்டாள். பின், அவளை நோக்கித், `தேனே! கொவ்வைப்பழம்போன்ற சிவந்த வாயும் மயில்போன்ற சாயலும் உடையாய்! ஏன் என்மேல் அளவிலாச் சினம்,ழு என்றேன். அவள் `நீர் முன் செந்தாமரையிலிருக்கும் தாயனைய திருமகளைக் கூடி வாழ்ந்தீர். அப்பிழையையும் பொறுத்து உம்முடன் அவளையும் என் அகத்துக்கு அழைத்துக்கொண்டேன். இப்பொழுது அவளுக்கு மூத்த தேவியையும் பொருந்தினீர். இனிப் பொறுக்க முடியாது,ழு என்று பிணங்கிச் சீறினாள். |
| | வனசம்-தாமரை. அவ்வை-தாயனைய திருமகள். தவ்வை-மூதேவி. சலம்-சீற்றம் |
| | 5 |
| | பொதுமகட்குப் பொன்னீயில் போடுவாள் வாய்மண் |
| 482 | உண்ணாம லிரவலர்க்கும் ஈயாமற் பூமிதனி லொளித்த பொன்னைக் கண்ணானாள் தனக்கீய வேண்டியதைத் தோண்டுகின்ற காலந் தன்னின் மண்ணானா ளெனைநோக்கி யெனக்கீந்த பொருளையினி வாங்கா நின்ற பெண்ணானா ளெனையுன்வாய் கொட்டுவளென் றேநகைத்துப் பேசி னாளே. |
|
| | சிறக்க உண்ணாமலும், பிறருக்கு ஈந்து வாழ்வின் ஊதியத்தைப் பெறாமலும் மண்ணில் பொருளைப் புதைத்து வைத்துள்ளேன். அப் பொருளைக் கண்ணே ஆகிய பொதுமகளுக்குக் கொடுக்கவேண்டி மண்ணைத் தோண்டினேன். அப்பொழுது நிலமகள், ழுநீ எனக்குத் தந்த பொருளை எடுத்துப் பொது மகளுக்குக் கொடுக்கப் போகின்றாய். வாங்குகின்ற அவள், உன் வாயில் என்னை (மண்ணை)ப் போடுவாள்,ழு என்று கூறி நகைத்தாள். |
| | 6 |
| | ஈயாதானை ஏசியடித்து உதைத்துமிழ்வள் பொதுமகள் |
| 483 | முனங்காலை வருடுமவள் கரங்கோல்போல் முதுகின்மேன் மோதப் பூமேல் அனங்கான மயிலென்ன நடஞ்செய்த கழனம்மே லாடித் தாக்கத் |
|