| கணிகையரியல்பு |
| தினங்கான ரசமுதவு வாயேசி உமிழவிந்தச் செய்கை கண்டும் இனங்காத லாயவளில் ஏகுதியோ நிற்றியோ இயம்பாய் நெஞ்சே. |
|
| மனமே! நிறையப் பொருள் கொடுத்து வந்த முன் நாட்களில் நம் காலை மெத்தெனப் பிடித்து இன்புறுத்து மவள், வறுமையுற்ற இந்நாளில் அவள் கையே முருட்டுக்கோல்போல் நம் முதுகில் அடித்தது. நிலத்தின்மேல் அன்னம்போலவும் நடந்து ஆடியுள்ள அவள் கால்கள் நம்மேல் ஆடித் துன்புறுத்தின. நாள்தோறும் இசையமுதூட்டும் அவள் வாய் திட்டியும் எச்சில் கொட்டியும் இழிவு செய்தது. இவைகளைக்கண்டும் இன்னமும் பேரன்பு கொண்டு அவள் வீட்டிற்குச் செல்லப்போகிறாயா? அல்லது போகாமல் நிற்கப்போகிறாயா? கூறுவாயாக. |
| வருடுதல்-தடவுதல்; பிடித்தல். அனம்-அன்னம். கழல்-கால். தாக்கல்-துன்புறுத்தல். கானம்-இசை. ரசம்-சுவை. இயம்பல்-சொல்லல். |
| 7 |
| ஆடவரை ஆண்கோலம் என்றறைவள் கிழவி |
484 | ஆவலா லவகாலத் தவளில்நான் புகச்சிலபே ரங்கி ருந்து மேவியோ டினர்சினமுற் றிவராரென் றேன்மாமி விரைவாய் வந்து பூவையிவள் நின்பிரிவாற் றாதழப்பாங் கியர்க்குனைப்போற் புருட வேடந் தாவறவே தரித்தவட்குக் காட்டினன்வே றன்றென்று சாதித் தாளே. |
|
| மிகுந்த வேட்கையுடன் காலங்கடந்து அவளுடைய வீட்டுக்குச் சென்றேன். சென்றதும் அங்கிருந்து சிலபேர் ஓடினர். சினங்கொண்டு இவர் யாரென்றேன். உடன் தாய்க்கிழவியாகிய மாமி வந்தாள். `உன்னுடைய பிரிவுத்துன்பம் பொறுக்காது என் மகள் அழுதாள்; அவள் அழுகையை நீக்கத் தோழியர்க்கு உன்னைப் போல் ஆண்கோலம் பொருத்தமுற அமைத்துக் காட்டினேன். வேறொன்று மின்று,ழு என உறுதியாகச் சொன்னாள். |
| ஆவல்-வேட்கை. அவகாலம்-எதிர்பாராத வேளை. பாங்கியர்-தோழியர். புருடவேடம்-ஆண்கோலம். தாவற-குற்ற |