| கணிகையரியல்பு |
| (மனமே!) காமன் மனைவியை ஒத்த பொதுமகளிர்பால் நாம் போய் இன்புற்று வருமுன் நம் மனைவி வெளியில் எங்கோ சென்று விட்டாள். வந்ததும், அவளைச் சார்ந்து நீ எங்குச் சென்றாய் என்று வினவினேன். அவள், `காமனையொத்த ஆடவரைக் கலந்தின்புறச் சென்றேன்ழு என்றாள். `கற்பினின்றும் வழுவாத பெருநோன்புடையவளே! இவ்வாறு கற்புக் கெடும் தீயொழுக்கம் புரிய யாரிடம் கற்றது,ழுஎன்றேன். அவள், `உம்மிடத்தும் உம்மை விருப்பமுடன் இனிமை செய்யும் பொதுமகளிடத்தும் கற்றதுழு என்றாள். இனி நாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது? (நம் தீயொழுக்கமே அவளைத் தீய ஒழுக்கத்தில் செல்லச் செய்கிறது.) |
| இரதி-காமன் மனைவி. சுரதம்-இனிமை. |
| 10 |
| பொதுமகட் சேர்வோர் பொல்லா விலங்கொப்பர் |
487 | சுவையுணவு தானிருக்க மலந்தேடி யோடுகின்ற சுணங்கன் போலும் குவையதனிற் கிடந்துறுநல் இடநீங்கித் திரிகின்ற கோகு போலும் நவைதீர்தண் நதித்தூநீர் அருந்தாதங் கணநீரை நாடல் போலுஞ் சிவையனைய காந்தையரை வெறுத்தசடர் வேசையரைச் சேர்வார் மாதோ. |
|
| தெய்வத் திருவருள் நங்கையை ஒத்த கற்புறு மனைவியரை வெறுத்து ஒதுக்கிப் பொதுமகளிரைச் சேரும் கீழோர்-இனிமையுள்ள உணவுகளிருப்பவும், அவற்றை அகற்றி மலத்தைவிரும்பி ஓடுகின்ற நாயையும், நல்ல இடத்தை விட்டுக் குப்பைமேட்டில் கிடப்பதற்குத் திரிகின்ற கழுதையையும், மாசில்லாத தூய யாற்றுநீர் பருகாது சாக்கடைக் கழிவுநீரைக் குடிக்க ஓடும் தாழ்ந்தோரையும் ஒப்பர். |
| சுணங்கன்-நாய். குவை-குப்பை. கோகு-கழுதை. அங்கணம்-சாக்கடை. சிவை-அருள்மங்கை. அசடர்-கீழோர். |
| 11 |
| கள்ளூன் களவாடாவிடில் கயிறுகொண்டு தூக்கிடுக |
488 | கோடுமுடல் மாமியெனை மதுவுடன்பு லால்திருடிக் கொணர்தி யென்றாள் பாடுபெறும் பார்ப்பானா னென்றேன்மற் றவையுண்ணப் பவம்போ மென்றாள் |
|